LIC, SBI மட்டுமல்ல 32 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு.. முதலீட்டின் நிலை என்ன?

அதானி குழுமத்தில் எல்ஐசி உள்பட 32 அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை செய்துள்ளன. டிசம்பர் 2022 நிலவரப்படி இந்த முதலீடுகள் 406 மியூச்சுவல் பண்ட் மூலமாக செய்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஆக தற்போது செயல்பாட்டில் உள்ள பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் மேலாளர்கள், அதானி குழும பங்குகளில் முதலீடுகளை சற்றே தள்ளி இருந்தாலும், கணிசமான முதலீடுகள் உள்ளதும் உண்மையே.

அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனங்கள் நிப்டி 50 குறியீட்டில் உள்ளன. அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களும் நிப்டி 50-ல் ஒரு பகுதியாக உள்ளன.

அதானி குழும பங்குகள் சரிவு

அதானி குழும பங்குகள் சரிவு


கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும நிறுவனங்கள் பலத்த சரிவினைக் கண்டன. அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பானது பெரும் சரிவினைக் கண்டது.குறிப்பாக இந்த சரிவில் சில்லறை முதலீட்டாளர்கள் பெரும் பாதிப்பினை கண்டனர் எனலாம்.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு

அதோடு அதானி குழும பங்குகள் பெரியளவில் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் பெரும் சரிவினைக் கண்டுள்ளன. டிசம்பர் 2022 நிலவரப்படி, 32 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 406 மியூச்சுவல் பண்ட் திட்டங்களின் மூலம் முதலீடு செய்துள்ளனவாம்.

சந்தை மதிப்பு சரிவு

சந்தை மதிப்பு சரிவு

கடந்த ஜனவரி 24ம் தேதியன்று ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்துள்ளன. இதற்கிடையில் அதானி குழும பங்குகள் 11.17 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழப்பினை கண்டுள்ளது. இது அதானி குழுமத்தின் செயல்திறனை அதிகரிக்கலாம்.

 3 கோடி முதலீட்டாளர்கள்

3 கோடி முதலீட்டாளர்கள்

ஏறக்குறைய சுமார் 3 கோடி முதலீட்டாளர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, மியூச்சுவல் பண்டுகளில் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்கின்றனர். இதன் மூலம் இந்த காலகட்டத்தில் கெளதம் அதானியின் சொத்து மதிப்பும் 62.6 பில்லியன் டாலர்கள் குறைந்து, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் 21வது இடத்திற்கு சரிவினைக் கண்டார்.

எஸ்பிஐ எவ்வளவு முதலீடு?

எஸ்பிஐ எவ்வளவு முதலீடு?

கடந்த ஜனவரி 24ல் இருந்து அதானி குழுமத்தினை சேர்ந்த 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 11.17 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.

அதானி குழுமத்தில் எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் 4748 கோடி ரூபாய் முதலீட்டினை செய்துள்ளது. இதே யுடிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனம் 1868 கோடி ரூபாயினை முதலீடு செய்துள்ளது.

மற்ற நிறுவனங்கள் எவ்வளவு?

மற்ற நிறுவனங்கள் எவ்வளவு?

கோடக் மகேந்திரா மியூச்சுவல் பண்ட் - ரூ.1593 கோடி

நிப்பான் இந்தியா மியூச்சுவல் பண்ட் - ரூ.1262 கோடி

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் மியூச்சுவல் பண்ட் - ரூ.1203 கோடி

ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் பண்ட் - ரூ.761 கோடி

குவாண்ட் மியூச்சுவல் பண்ட் - ரூ.695 கோடி

ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் பண்ட் - ரூ.398 கோடி

டாடா மியூச்சுவல் பண்ட் - ரூ.389 கோடி

என் ஜே மியூச்சுவல் பண்ட் - ரூ. 297 கோடி

டிஎஸ்பி மியூச்சுவல் பண்ட் - ரூ.241 கோடி

ஐடிஎஃப்சி மியூச்சுவல் பண்ட் - ரூ.206 கோடி

எடில்வைஸ் மியூச்சுவல் பண்ட் - ரூ.174 கோடி

ஆக்ஸிஸ் மியூச்சுவல் பண்ட் - ரூ.154 கோடி

மிரே அசெட் மியூச்சுவல் பண்ட் - ரூ.58 கோடி

ஹெச்.எஸ்.பி.சி மியூச்சுவல் பண்ட் - ரூ.54 கோடி

மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் பண்ட் - ரூ.44 கோடி

எல் ஐ சி மியூச்சுவல் பண்ட் - ரூ.39 கோடி

சுந்தரம் மியூச்சுவல் பண்ட் - ரூ.39 கோடி

பிஜிஐஎம் மியூச்சுவல் பண்ட் - ரூ.35.5 கோடி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+