இந்தியாவில் வங்கிகள் ,நிதி நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளும் மக்களுக்கு தனிநபர் கடனில் தொடங்கி வாகன கடன்கள் வரை பல்வேறு வகையான கடன்களை வழங்குகின்றன. இவ்வாறு வழங்கக்கூடிய கடன்களை திரும்ப வசூல் செய்வதற்கு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்தியாவில் அதிகமாக சிறு கடன்கள் தான் வழங்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்கும் கடன்கள். மொபைல் போன் வாங்குவது, வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது, தனிநபர் கடன்கள் ஆகியவற்றுக்காக குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பலரும் பைனான்ஸ் நிறுவனங்கள் வாயிலாக இந்த கடன்களை வாங்குகின்றனர்.

பஜாஜ் பைனான்ஸ், சோலமண்டலம் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தான் 85% சிறு கடன்களை வழங்குகின்றன. இவ்வாறு சிறு கடன்களை வாங்குவோர் அவற்றை உரிய நேரத்தில் செலுத்துவதில்லை. இந்த கடன் பணத்தை திரும்ப பெறுவது பெரிய சிக்கலாக இருப்பதாக இந்த நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆர்பிஐ இடம் புகார் கூறி வருகின்றன.
இந்த சூழலில் தான் இந்த வாரா கடன்களை வசூல் செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி சில அதிகாரங்களை வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் வழங்க இருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதன்படி கடன் வாங்கி அதனை திரும்ப செலுத்தாமல் இருக்கக்கூடிய நபர்களின் மொபைல் ஃபோன்களை இந்த நிறுவனங்கள் லாக் செய்யும் அதிகாரத்தை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருக்கிறதாம்.
இதன்படி ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனம் ஒரு நபருக்கு கடன் வழங்குகிறது என்றால் கடன் வழங்கக்கூடிய சமயத்திலேயே ஒரு குறிப்பிட்ட செயலியை அந்த நபரின் மொபைல் போனில் டவுன்லோட் செய்து விடுவார்களாம். இந்த செயலி கொண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் அந்த வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ அந்த போனை லாக் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது . ரிசர்வ் வங்கி இந்தியாவை சேர்ந்த அனைத்து வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி fair practical code என்பதை அப்டேட் செய்து அடுத்த சில மாதங்களுக்குள் அறிவிப்பு வெளியிட இருக்கிறது.
இந்த அறிவிப்பில் ஒரு வாடிக்கையாளர் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லை என்றால் அவருடைய போனை லாக் செய்வதற்கான வழிமுறைகள் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. இவ்வாறு ஆர்பிஐ அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் நீங்கள் கடன் வாங்கி அதனை திரும்ப செலுத்தவில்லை என்றால் வங்கிகள் உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய போனை லாக் செய்யும் அதிகாரத்தை பெறும்.
கடன் வாங்கக்கூடிய சமயத்தில் அந்த நபரின் அனுமதியைப் பெற்ற தான் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த செயலியை அவர்கள் போனில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் இதன் மூலம் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அந்த போனில் இருக்கக்கூடிய தனிப்பட்ட தகவல்களை எடுக்க முடியாது என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் இது சிறிய அளவிலான கடன்களுக்கு தான் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications