உலகளவில் இருக்கும் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளுக்கும் ஆப்பிள் நிறுவனம் ஒற்றை இலக்காக உள்ளது. இந்த நிறுவனத்தை அடைவதும், அதனுடன் நேருக்கு நேர் போட்டிப்போடுவது தான் இலக்காக கொண்டு செயல்படுகிறது.
அப்படி ஆப்பிள் உடன் போட்டிப்போட ONEPLUS நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ஒரு நிறுவனர் தான் கார்ல் பேய், இவர் உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் NOTHING. இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் ஆகியவை கிட்டத்தட்ட ஆப்பிள் பொருட்களின் தரத்துடன் இருக்கும். ஆனால் கண்ணாடி போன்ற டிசைன் கொண்டவை.
சமீபத்தில் NOTHING அறிமுகம் செய்த போன்2 மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேவேகத்தில் NOTHING தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை பெறவும் CMF என்ற சப் பிராண்ட்-ஐ உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கார்ல் பேய் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் CMF என்றால் என்னவென்று கண்டுப்பிடித்துவிட்டீர்களா என ட்வீட் செய்தார். இதற்கு Color Material Finish என்று பலரும் பதில் அளித்தனர்.
இந்த செய்தி வெளியான அடுத்த சில வாரத்தில் NOTHING பிராண்டின் சப் பிராண்டான CMF அறிமுகம் செய்யும் புதிய இயர் பட்ஸ் ப்ரோ 3499 ரூபாய்க்கும், வாட்ச் ப்ரோ 4499 ரூபாய்க்கும், 65W போன் சார்ஜர் 2999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது என்றும், செப்டம்பர் 26 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக லான்ச் செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
NOTHING பிராண்டின் தயாரிப்புகள் அனைத்தும் கண்ணாடி போன்று இருக்கும் வேளையில் அதன் துணை பிராண்டான CMF ஆரஞ்சு நிறத்தில் இதுவரையில் யாரும் வெளியிடாத நிறத்தில் இளைஞர்களை கவரும் நோக்கில் அறிமுகம் செய்ய உள்ளது. எதற்காக இந்த சப் -பிராண்ட்..? சப்-பிராண்டின் முக்கியத்துவம் என்ன..?

உலகளவில் இன்று மிகப்பெரிய வர்த்தக சந்தையாக மாறியிருக்கும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் விலையும் தரம் தான் முக்கிய USP. ஆனால் தரத்தை உயர்த்தினால் விலையும், உயரும் என்பதை மறுக்க முடியாது, இந்த இடத்தில் தான் பல பெயர் தெரியாத நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்களின் வர்த்தகத்தை ஈர்த்து வருகிறது.

இதை எளிதாக சொல்ல வேண்டுமெனில் ஆப்பிள் ஐபோன் வாங்க சென்றால் அதன் விலையை பாத்து தெறித்து ஓடும் பலருக்கு அடித்த பட்ஜெட் தேர்வாக இருப்பது ஒன்பிளஸ் என்றால் மிகையில்லை. சாம்சங் கிட்டத்தட்ட ஆப்பிள் ஐபோன் விலைக்கு இணையாக விற்கப்படும் காரணத்தால் பெரும்பாலான மக்களுக்கு ஒன்பிளஸ் சிறந்த தேர்வாக இருக்கிறது. இப்படி படிப்படியாக பட்ஜெட்-க்கு ஏற்ப பிராண்டுகள் உள்ளது.

இப்படி வாடிக்கையாளர்களை இழக்க கூடாது என்பதற்காகவே மக்களை அதிகளவில் ஈர்த்த பல பிராண்டுகள், குறிப்பாக சீன எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகள் அதிகப்படியான சப் பிராண்டுகளை உருவாக்கி அதன் மூலம் அனைத்து பட்ஜெட் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இதன் மூலம் சிறிய நிறுவனங்களும், புதிதாக அறிமுகமாகும் பிராண்டுகளும் கடுமையாக வர்த்தக போட்டியை எதிர்கொள்ளும்.

மேலும் பெரிய நிறுவனங்கள் இந்த சப் பிராண்ட் கீழ் தனது வர்த்தக மற்றும் உற்பத்தி தொடர்புகளை வைத்தே மலிவு விலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும். இதன் மூலம் கூடுதல் வருமானமும், கூடுதல் வர்த்தகமும், கூடுதல் வாடிக்கையாளர்களையும் பெற முடியும். இதன் மூலம் ஒரு கட்டத்திற்கு பின்பு CMF வாடிக்கையாளர்களை NOTHING வாடிக்கையாளராக மாற்ற முடியும்.

இப்படி எந்தெந்த பிராண்டுகள் சப்-பிராண்ட் கட்டமைப்புடன் இயங்கி வருகிறது.
சியோமி-க்கு - ரெட்மி மற்றும் போகோ என இரு சப்-பிராண்ட் உள்ளது.
விவோ பிராண்டுக்கு - iQOO
oppo பிராண்டுக்கு - realme
Huawei பிராண்டுக்கு - honor



Click it and Unblock the Notifications