எஸ்பிஐ வங்கி தனது ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு உத்தரவினை கொடுத்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பொதுவாக பலருக்கும் நிம்மதி அளிக்கும் ஒரு அறிவிப்பு என்றே கூறலாம்.
எஸ்பிஐ-யின் இந்த அறிவிப்பின் மூலம், இனி எஸ்பிஐ-யின் இன்சூரன்ஸ் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது வலுக்கட்டாயமாகவும் நியாயமற்ற முறையிலும் வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டங்கள் விற்கப்படுவதை தடுக்க வங்கித் தலைவர்கள் நடவடக்கை எடுக்க வேண்டும் என்ற நிதியமைச்சகம் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பினை கொடுத்துள்ளது.
கட்டாயப்படுத்துகிறார்கள்?
நிதியமைச்சகத்தின் இந்த அறிவிப்பானது வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது நிதியமைச்சகத்திற்கு பரவலாக பல புகார்கள் வந்த நிலையில் இந்த உத்தரவினை பிறப்பித்தாகவும் கூறப்பட்டது.
75 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும், கடன் வாங்க வருபவர்களுக்கும் வலுக்கட்டாயமாக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை, வாங்க வங்கிகள் கட்டாயப்படுத்துவதாகவும், அதனை வாங்க மாறுக்கும் பட்சத்தில் நெருக்கடிகள் தரப்படுவதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
நிதியமைச்சக சேவைத் துறை
மேலும் காப்பீடுகளை விற்பனை செய்வதற்கு ஊக்கத்தொகை அளிப்பது வங்கியின் வர்த்தகத்தை பாதிக்கும் என்றும் மத்திய ஊழல் கண்கானிப்பு ஆணையமும் தெரிவித்தது.
இதற்கிடையில் தான் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வலுக்கட்டாயமாகவும் நியாமற்ற முறையிலும், இன்சூரன்ஸ் வழங்குவதை தடுக்க வங்கித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதியமைச்சக சேவைத் துறை அறிவித்தது.
தேவையில் அடிப்படையில் விற்பனை
எஸ்பிஐ-யின் இந்த அறிவிப்பின் மத்தியில் தேவை அடிப்படையிலான விற்பனையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனினும் எந்தவொரு வாடிக்கையாளர்களையும் கட்டாயப்படுத்துவதன் மூலம், விற்பனை செய்யக்கூடாது என்று வங்கியின் பொது மேலாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளது.
மற்ற வங்கிகளிலும் அப்படித் தான்
இதுபோன்ற கட்டாயப்படுத்துதல் என்பது பல்வேறு வங்கிகளிலும் இருந்து வருகின்றது என்றே கூறலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்றே கூறலாம். வங்கிகள் இதுபோன்ற துணை நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இதனால் ஊழியர்களும் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எஸ்பிஐ இந்த அற்விப்பு போன்று இனி மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும் கொண்டு வந்தால் அது, வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் எனலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications