புதிதாக பிறக்கும் ஒவ்வொரு மாதமும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக அந்த மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான விடுமுறைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் இந்தப் பட்டியலைக் கட்டாயம் அறிந்துகொள்வது அவசியம். ஏனெனில், இதைப் பொறுத்தே வங்கி தொடர்பான முக்கியமான தங்கள் வேலைகளைத் திட்டமிட்டுக் கொள்ள முடியும்.
அக்டோபர் மாதம் முடிந்து நவம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இம்மாதத்தில் வங்கிப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், விடுமுறை நாட்களை குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அக்டோபருடன் ஒப்பிடுகையில் நவம்பரில் விடுமுறை நாட்கள் சற்று குறைவாகவே இருந்தாலும், நாடு முழுவதும் வாராந்திர விடுமுறைகள், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் சில மாநில அளவிலான பண்டிகைகள் என சேர்த்து வங்கிகள் மொத்தம் 11 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாள்காட்டியின்படி, நவம்பர் மாதம் பண்டிகைகள் காரணமாக பல இடங்களில் வங்கிகள் செயல்படாது. உள்ளூர் விடுமுறைகளை தவிர, மற்ற மாநிலங்களில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்.
நவம்பர் 1 (சனிக்கிழமை): கர்நாடகாவில் கன்னட ராஜ்யோத்சவம் (1956 இல் கன்னடம் பேசும் பகுதிகள் இணைந்த நாள்) காரணமாக அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். இதேபோல், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனிலும் இகாஸ்-பக்வால் (புத்தி தீபாவளி) காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 5 (புதன்கிழமை): குருநானக் ஜெயந்தி, கார்த்திக் பூர்ணிமா மற்றும் ரஹாஸ் பூர்ணிமா ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, சென்னை உட்பட ஐஸ்வால், போபால், சண்டிகர், ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, மும்பை, லக்னோ உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நகரங்களில் வங்கிகள் இயங்காது.
நவம்பர் 6 (வியாழக்கிழமை): மேகாலயாவின் ஷில்லாங்கில் நொங்க்க்ரெம் நடனம் காரணமாக விடுமுறை.
நவம்பர் 7 (வெள்ளிக்கிழமை): மேகாலயாவின் ஷில்லாங்கில் வாங்காலா விழா காரணமாகவும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 8 (சனிக்கிழமை): பெங்களூருவில் கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான கனகதாசர் ஜெயந்தி கொண்டாடப்படுவதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 11 (செவ்வாய்க்கிழமை): சிக்கிம் மாநிலத்தில் புத்த பண்டிகையான ல்ஹாபாப் டுச்சென் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாராந்திர விடுமுறை நாட்கள் : மேலே குறிப்பிடப்பட்ட பண்டிகை விடுமுறைகள் தவிர, நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் கீழ்க்கண்ட நாட்களில் வார விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும்
நவம்பர் 2 (ஞாயிறு)
நவம்பர் 8 (இரண்டாம் சனிக்கிழமை)
நவம்பர் 9 (ஞாயிறு)
நவம்பர் 16 (ஞாயிறு)
நவம்பர் 22 (நான்காம் சனிக்கிழமை)
நவம்பர் 23 (ஞாயிறு)
நவம்பர் 30 (ஞாயிறு)
டிஜிட்டல் சேவைகள் தொடரும் : வங்கி கிளைகள் மூடப்பட்டாலும் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யுபிஐ (UPI), மற்றும் ஏடிஎம் (ATM) போன்ற டிஜிட்டல் சேவைகள் வழக்கம்போல் செயல்படும். இதன் மூலம் பணப் பரிவர்த்தனை, கட்டணம் செலுத்துதல், இருப்புச் சரிபார்ப்பு போன்ற அனைத்துச் சேவைகளையும் வாடிக்கையாளர்கள் தடையின்றிப் பயன்படுத்தலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications