இந்தியாவில் பண்டிகை காலத்தின் காரணமாக நவம்பர் மாதம் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியை அடைந்தது.
பொதுவாக ஆட்டோமொபைல் துறையின் விற்பனை அளவுகள் பொருளாதார வல்லுனர்களால் அதிகம் கவனிக்கப்படும் ஒரு அளவீடு என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆட்டோமொபைல் விற்பனை தான் தனியார் பிரிவின் நுகர்வு அளவின் முக்கியக் காரணியாக உள்ளது. இதேபோல் தனியார் பிரிவின் நுகர்வில் சுமார் 50 சதவீதம் ஆட்டோமொபைல் விற்பனை பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் பணிநீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கை காட்டிலும் அதிகமாக இருந்தாலும் ஆட்டோமொபைல் துறையின் விற்பனை பெரிய அளவிற்கு நம்பிக்கை அளிக்கிறது.
கார் விற்பனை
நவம்பர் மாதம் மொத்த பயணிகள் கார் விற்பனையில் மாருதி சுசூகி 22.6 சதவீதம், மஹிந்திரா & மஹிந்திராவில் 56.2 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 55 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றான யுடிலிட்டி கார்களின் விற்பனை மாருதி சுசூகி நிறுவனத்தில் 32.5 சதவீதம் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தில் சுமார் 56 சதவீதம் அதிகரித்துள்ளது.
டிராக்டர் விற்பனை
இதேபோல் கிராமப்புறப் பொருளாதாரத்தின் தேவை மற்றும் விவசாய வருமானத்தின் நிலையைக் குறிக்கும் டிராக்டர்கள் விற்பனை அளவுகளைப் பார்க்கும் போது, மஹிந்திரா மற்றும் VST டில்லர்ஸ் டிராக்டர்களில் தலா 10.3 சதவீதம் வளர்ச்சியும், எஸ்கார்ட்ஸ் குபோடா விற்பனை 11.3 சதவீதம் இந்த நவம்பர் மாதம் அதிகரித்துள்ளது.
இரு சக்கர வாகன பிரிவு
இதைத் தொடர்ந்து நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் இரு சக்கர வாகன பிரிவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை இந்த நவம்பர் மாதத்தில் ஓரளவுக்கு உயர்ந்து 263,642 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
டிவிஎஸ் நிறுவனம்
இதைத் தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ-வின் விற்பனை கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 22.6 சதவீதம் சரிந்து 262,120 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
பிர்மியம் பைக்
இதே போல் இரு சக்கர வாகன பிரிவில் பிர்மியம் பிரிவில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை 37 சதவீதம் அதிகரித்து 70,766 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications