இந்தியாவில் சில்லறை பணவிக்க விகிதம் நவம்பர் மாதத்தில் 5.48 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சில்லறை பணவிக்க விகிதம் 6.21 சதவீதமாக இருந்தது. அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடும்போது பணவிக்கம் நவம்பரில் சற்று குறைந்து நிம்மதி அளித்துள்ளது. முக்கியமாக உணவுப் பொருட்களின் விலைகள், காய்கறிகளின் விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக இந்த பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. இது குறித்த தகவல்களை வியாழக்கிழமை அன்று அரசாங்கம் தெரிவித்தது.
வெளியிடப்பட்ட தரவுகளின் படி, நுகர்வோர் விலை குறியீடு (CPI) நவம்பர் மாதத்தில் 9.04 சதவீதமாக குறைந்துள்ளது. இது அக்டோபர் மாதம் 10.87 சதவீதமாகவும், 2023-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 8.70 சதவீதமாகவும் இருந்தது.

பணவீக்கம் என்றால் என்ன?: பணவீக்கம் என்பது பணத்தின் வாங்கும் சக்தி குறைவதைக் குறிக்கிறது. அதாவது 100 ரூபாய்க்கு முன்பு வாங்கிய பொருட்களில் பாதியை கூட தற்போது வாங்க முடிவதில்லை. அந்த அளவுக்கு விலை ஏற்றம் ஏற்பட்டு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்து பணத்தின் வாங்கும் சக்தி குறைந்து போவதை தான் பணவீக்கம் என்று கூறுகின்றனர். அரசாங்க கொள்கைகள், பொருளாதார நிலை போன்றவற்றை மதிப்பிடுவதற்கு பணவீக்கம் ஒரு முக்கிய குறியீடாக உள்ளது.
சில்லறை பணவீக்கம் என்றால் என்ன?: சில்லறை பணவீக்கம் என்பது நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வை குறிக்கிறது. இதை பொதுவாக நுகர்வோர் விலை குறியீட்டை வைத்து கணக்கிடுகின்றனர். நுகர்வோர் விலை குறியீடு அதிகமாகும் போது சில்லறை பணவீக்கமும் அதிகரிக்கிறது. அதாவது மக்கள் பெரும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்ந்து நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைகிறது. அதுவே CPI விகிதம் குறையும் போது பணவீக்கமும் குறைகிறது.
2024-ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, பால் பொருட்கள், சர்க்கரை, திண்பன்டங்கள், பழங்கள், மசாலாப் பொருட்கள், போக்குவரத்து செலவுகள், தகவல் தொடர்பு ஆகியவற்றில் ஏற்பட்ட விலை குறைப்பின் காரணமாக பணம்வீக்கத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக தேசிய புள்ளியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ரிசர்வ் வங்கி நடப்பு நதியாண்டிற்கான பணவீக்க விகிதத்தை 4.5 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை காரணமாக டிசம்பர் காலாண்டில் பணவீக்கம் உயரக்கூடும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி பொதுவாக பணவீக்க கணிப்பை முன்கூட்டியே அறிவிக்கும். அந்த வகையில் டிசம்பர் காலாண்டிற்கும் பணவிக்க விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications