டெல்லி: உலக அளவில் உடல் பருமன் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமனாலும் அது சம்பந்தப்பட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையிலும் அதனால் ஏற்படும் இருதய பிரச்சனைகளை குறைக்கும் வகையிலுமான ஒரு மருந்து கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
இந்தியாவில் நீரிழிவு நோயின் தலைநகரமாக இருக்கிறது. தற்போது இளம் வயதிலேயே பலரும் நீரிழிவு நோய்க்கு ஆளாவதை காண முடிகிறது. இந்த நீரிழிவு நோயால் உடல் பருமன், இருதய பிரச்சினை என பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு சரியான உணவு முறை, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை பின்பற்றினால் நீரிழிவை கட்டுக்குள் வைத்து கொள்ள முடியும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

இருந்தாலும் இந்த அவசர உலகில் பலருக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை, உணவு கட்டுப்பாடும் இப்போது கேள்விக்குறியாகிவிட்டது. இந்த சூழலில் உடல் பருமன் பிரச்சினைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வகையிலுமான ஒரு மாத்திரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டென்மார்க் நாட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய நோவா நார்டிஸ்க் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நோய்களுக்கு மருந்துகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் நீரிழிவு எதிர்ப்பு மற்றும் எடை இழப்பு மருந்தான வெகோவியை (Wegovy) அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது.

Semaglutide என்பதை அடிப்படையாக கொண்டு நோவா நார்டிஸ்க் நிறுவனம் இந்த மருந்தினை உருவாக்கி இருக்கிறது. அண்மையில் தான் அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருத்துவ நிறுவனமான எலி லில்லி (Eli Lilly's) நிறுவனம் மௌஞ்சாரோ என்ற எடை குறைப்பு மருந்தினை அறிமுகம் செய்தது. இது tirzepatide அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மருந்தாகும்.
இந்த நிலையில் அந்த மருந்துக்கு போட்டியாக நோவா நார்டிஸ்க் நிறுவனம் வெகோவி என்ற மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகிறது. இந்த மருந்து இந்திய நோயாளிகளுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நோவா நார்டிஸ்க் தாக்கல் செய்துள்ள ஒழுங்குமுறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் வெகோவி மருந்து இந்திய சந்தையில் போட்டி விலையில் அறிமுகம் செய்யப்படும் என இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எலி லில்லி நிறுவனம் அறிமுகம் செய்த மௌஞ்சாரோ மருந்து இந்திய சந்தையில் தற்போது வரவேற்பை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் நோவா நார்டிஸ்க் நிறுவனம் தங்களுடைய வெகோவி மருந்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது. வெகோவி மருந்துக்கான பிரத்தியேக காப்புரிமை அடுத்த ஆண்டுடன் காலாவதியாகும் என சொல்லப்படுகிறது. இதனை அடுத்து இந்தியாவில் Semaglutide மருந்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு பிராண்டுகளின் மருந்துகள் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது.

எனவே அதற்குள் இந்திய சந்தையை பிடித்து விட வேண்டும் என்ற தீவிரத்தோடு இயங்கி வருகிறது நோவா நார்டிஸ்க். இந்தியாவில் புதிய மருந்துகளின் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான தரவுகளை மதிப்பாய்வு செய்யும் மத்திய மருந்து ஆணையத்தின் கீழ் செயல்படக்கூடிய நிபுணர்கள் குழு, கடந்த மாதம் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் வெகோவி மருந்து இதயம் சம்பந்தப்பட்ட அபாயங்களை குறைப்பதாக வழங்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த மருந்தை நோயாளிகளுக்கு இருதய நிபுணர்களும் பரிந்துரை செய்ய முடியும் என அந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாம். ஏற்கனவே எண்டோக்ரைனாலஜிஸ்ட் நிபுணர்கள் இந்த மருந்தினை பரிந்துரை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருந்தாலும் இந்த குழுவின் பரிந்துரைகளை இந்தியாவின் மிக உயர்ந்த அதிகார அமைப்பான இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்று ஒப்புதல் தர வேண்டும். அதன்பிறகு இந்த மருந்து முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த வெகோவி மருந்துக்கு அனுமதி தந்து விட்டால் இந்தியாவில் நீரிழிவு மற்றும் இதய நோயுடன் வாழும் மக்களுக்கு ஒரு புதிய சிகிச்சை வாய்ப்பாக இது மாறும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் உடல்பருமன் மருந்து சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் நோவா நார்டிஸ்க் நிறுவனம் வெகோவி மருந்தின் மூலம் அதனை முழுமையாக கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு இருக்கிறது.
இருந்தாலும் இந்த மருந்து இந்தியாவில் வெற்றி அடைவதும் தோல்வியடைவதும் அதன் விலையை பொறுத்து தான் அமையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய சந்தையில் சரியான நேரத்தில் வெகோவி மருந்தினை அறிமுகம் செய்ய வேண்டும் என நோவா நார்டிஸ்க் திட்டமிட்டு இருக்கிறது. இருந்தாலும் இந்திய மக்களைப் பொறுத்தவரை இதன் விலை அதிகமாக இருந்தால் அது வெகுஜன மக்களை சென்று சேராது என மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
விலை அதிகமாக இருந்தால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இவற்றை வாங்க முன் வருவார்கள் என கூறுகின்றனர். இந்தியாவில் ஏற்கனவே வெகோவி மருந்தினை நீரிழிவு மற்றும் உடல் எடை இழப்பு சிகிச்சைக்காக வழங்கலாம் என ஆரம்பகட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் உலக அளவில் தற்போது உடல் எடை குறைப்பு சிகிச்சை அதிகரித்து வருவதால் இதனை ஒரு தயாரிப்பாக நோவா நார்டிஸ்க் நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவில்லை. ஆனால் அமெரிக்காவில் இந்த மருந்தினை நோவா நார்டிஸ்க் விற்பனை செய்கிறது.
நோவா நார்டிஸ்க் ஏற்கனவே 2022ஆம் ஆண்டு Rybelsus என்ற ஒரு வாய்வழி மருந்தை அறிமுகம் செய்தது. இந்த மருந்து நீரிழிவு மற்றும் எடை இழப்புக்கு உதவும் என சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் ஊசிகளுடன் ஒப்பிடும்போது இது குறைந்த செயல் திறன் கொண்டதாக இருப்பதால் பெரும்பாலான மக்களிடம் இது எடுபடவில்லை.
முன்னதாக எலி லில்லி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த மௌஞ்சாரோ எடை குறைப்பு மருந்து ஊசி மூலம் போடப்படுவது ஆகும். ஏற்கனவே இது அமெரிக்காவில் விற்கப்படுகிறது. இந்தியாவில் 2.5 மில்லி கிராம் கொண்ட ஒரு குப்பி 3,500 ரூபாய்க்கும் 5 மில்லிகிராம் கொண்ட ஒரு குப்பி 4,375 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications