மதுவிற்பனை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக அரசு..
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு ஒரு மணி வரை மது விற்பனை செய்யலாம் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி பெங்களூரில் செயல்படக்கூடிய நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பார்கள், கிளப்புகளில் இனி நள்ளிரவு 1 மணி வரை மதுபானங்கள் கிடைக்கும்.
இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம், சிலிக்கான் வேலி என பல பெயர்களை பெற்றுள்ளது பெங்களூரு நகரம். இங்கே பல்வேறு வெளிநாட்டவர்களும் கூட தங்கி பணிபுரிகின்றனர்.

வழக்கமாக இங்கே செயல்படும் பார்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகளில் இரவு 11 மணிக்கு மேல் மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கர்நாடக அரசு அந்த தடையை நீடிக்கி இரவு 1 மணி வரை மதுபானம் விற்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த புதிய உத்தரவின் படி கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், பார்களில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் மதுபானம் விற்பனை செய்யப்படும். பெங்களூரு நகரத்தை பொருத்தவரை ஐடி நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.
எனவே இந்த 24 மணி நேர வாழ்க்கை முறையை குறிப்பிடும் நோக்கத்தில் தான் மதுபான விற்பனை நேரம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. பெங்களூரு நகரில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பார் நடத்தி வருபவர்கள் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது இதன் மூலம் பெங்களூரு சர்வதேச நகரம் என்ற ஒரு பார்வையை பெறுகிறது என கூறுகின்றனர். ஏனெனில் உலக அளவில் ஐடி நிறுவனங்கள் அதிகம் செயல்படும் நகரங்கள் எல்லாமே 24 மணி நேரமும் இயங்குகின்றன.
இங்கே மட்டும் 11 மணி வரை மட்டும்தான் மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு என்பது ஏற்புடையதாக இல்லை, ஏனெனில் பெரும்பாலானவர்கள் 12:30 மணிக்கு தங்களுடைய வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புகிறார்கள் அப்போது மது அருந்த வேண்டும் என விரும்பும்போது அவர்களுக்கு கிடைப்பது கிடையாது குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர் என்கின்றனர் பார் உரிமையாளர்கள்.
இரவு 1 மணி வரை மதுபானங்களை விற்கலாம் என்ற முடிவு வரவேற்பு பெற்றதாகவே தெரிகிறது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்து இங்கே தங்கி வேலை செய்பவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பார்ட்டிக்காகவே பெங்களூரு வருகை தருபவர்களுக்கு இந்த அறிவிப்பு குஷியை ஏற்படுத்தியுள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications