Zomato நிறுவனத்தை மிஞ்சியது Blinkit.. முதலீட்டாளர்கள் ஷாக்..!

மும்பை: இந்தியாவில் தற்போது டெலிவரி செயலிகளுக்கான தேவை என்பது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு டெலிவரி சேவைகளை வழங்கி வருகின்றன.

இதில் ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய செயலிகள் உணவு டெலிவரியில் கவனம் செலுத்தி வரும் நிலையில் ஸெப்டோ , பிளிங்கிட் போன்றவை ஹைபர் லோக்கல் டெலிவரி சேவையில் ஈடுபட்டுள்ளன. இதில் உணவு டெலிவரியை விட மளிகை , பால் உள்ளிட்டவற்றை டெலிவரி செய்யும் ஹைப்பர் லோக்கல் டெலிவரி செயலிகளின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

Zomato நிறுவனத்தை மிஞ்சியது Blinkit.. முதலீட்டாளர்கள் ஷாக்..!


கடந்த 2012 ஆம் ஆண்டு சோமேட்டோ நிறுவனம் 568 மில்லியன் டாலர்களுக்கு பிளிங்கிட் நிறுவனத்தை வாங்கியது. இதனை அடுத்து பிளிங்கிட் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வந்தது.

தற்போது பிளிங்கிட்டின் மதிப்பு சோமேட்டோ வை விட உயர்ந்திருப்பதாக கோல்ட்மேன் சச்ஸ் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. கோல்ட்மேன் சச்ஸ் தரகு நிறுவனம் பிளிங்கிட்டின் ஈக்விட்டி வேல்யூஷனை 13 பில்லியன் டாலர்கள் அதாவது ஒரு பங்கின் மதிப்பு 119 ரூபாய் என உயர்த்தி மதிப்பீடு செய்துள்ளது .

இது தொடர்பாக கோல்ட்மேன் சச்ஸ் தரகு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளிங்கிட்டின் மதிப்பை 8 பில்லியன் டாலர்களாக வைத்திருந்தோம், தற்போது அதனை 13 பில்லியன் டாலர்கள் என உயர்த்தி இருக்கிறோம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு பிளிங்கிட்டின் கிராஸ் ஆர்டர் வேல்யூ என்பது கடந்த ஓராண்டு காலத்தில் 50 சதவிகிதம் அதிகரித்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிளிங்கிட்டின் மதிப்பீடு வெறும் 2 மில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் தற்போது அது 13 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின் படி பிளிங்கிட்டின் ஒரு பங்கின் மதிப்பு 119 ரூபாய் என இருக்கும், ஆனால் இதன் பிரதான செயலியான சோமேட்டோ வின் ஒரு பங்கு மதிப்பே 98 ரூபாய் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக சோமேட்டோ வை விட பிளிங்கிட்டின் மதிப்பு அதிகரித்துள்ளது என்றும் கோல்ட்மென் சச்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

பிளிங்கிட்டின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி, சோமேட்டோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீடு தந்துள்ளது கோல்ட்மென் சச்ஸ் நிறுவனம். தற்போது சோமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் 188 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகும் நிலையில் விரைவில் இது 240 ரூபாயை எட்ட கூடும் என கணிப்பு வெளியிட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தை சேர்ந்த 28 ஆய்வாளர்களில் 24 பேர் சோமேட்டோ விற்கு பாசிட்டிவான மதிப்பீடை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

சோமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஓராண்டு காலத்தில் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு 224.44% லாபத்தை பெற்று தந்துள்ளது. நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1,62,946 கோடி ரூபாயாக இருக்கிறது. இதன் புக் வேல்யூ 22.43 என்ற அளவில் உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 7,761 கோடி ரூபாய் வருவாயி ஈட்டியுள்ள இந்நிறுவனத்தின் மதிப்பு 19,453 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+