அண்மையில் சென்னை - விக்கிரவாண்டி - கும்பகோணம்- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் பயணம் செய்த ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இந்த இடத்தில் நான் மின்சார ரயில் நிலையத்தையும் காண விரும்புகிறேன் என எக்ஸ் தள பக்கத்தில் தன்னுடைய விருப்பத்தை பதிவு செய்துள்ளார்.
ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அவ்வப்போது நாட்டின் பொருளாதாரம் ,நிதி நிலவரம், உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது குறித்து தொடர்ச்சியாக தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் அண்மையில் இவர் சென்னை- விக்கிரவாண்டி- கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் பயணம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதன்முறையாக நான் சென்னை - விக்கிரவாண்டி- கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் பயணம் செய்தேன். இது என்னுடைய கிராமமான சிதம்பரநாதபுரம் வழியே செல்கிறது. என்னுடைய கிராமத்தின் பெயர் பலகையை பார்த்தவுடன் என்னுடைய சிறிய கிராமம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது என்பதை உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார். இப்போது இங்கே நான் மின்சார ரயில் நிலையத்தையும் காண விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் லைக்குகளை பெற்றுள்ளது. அவருடைய இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள ஒரு பயனர் மெட்ரோ ரயில்கள் அல்லது இன்டர்சிட்டி ரயில்களை நீங்கள் குறிப்பிடுகிறீர்களா என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு பல்வேறு கிராமங்களையும் இணைக்க கூடிய வகையில் உள்ளூர் ரயில் சேவைகளை கொண்டு வர வேண்டும் என்பதே தன்னுடைய பதிவின் நோக்கம் என கூறியுள்ளார்.
பரவலாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் கிராமப்புற உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு எப்போதும் கூறி வருகிறார். உள்ளூர் பொருளாதாரங்களை வலுப்படுத்துவது முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் தன்னுடைய ஸோஹோ நிறுவன அலுவலகத்தையே தமிழ்நாட்டில் தென்காசி பகுதியில் அவர் நிறுவி இருக்கிறார்.
பல்வேறு தொழில் நிபுணர்களும் தங்களுடைய சொந்த கிராமங்களிலும் சிறு சிறு நகரங்களிலும் இதுபோன்ற புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார். அண்மையில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலிக்கு சென்று இருந்த தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருந்த ஸ்ரீதர் வேம்பு இந்த வாரம் நான் சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்றிருந்தேன் அங்கே ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் தான் நான் தங்கி இருந்தேன். அது ஒரு அழகான இடம் நிறைய பூங்காக்கள் இருந்தன ஆனால் அங்கே எந்த ஒரு சிறு பிள்ளைகளும் தெருவில் வந்து விளையாடுவதை நான் பார்க்க முடியவில்லை. தென்காசி போன்ற ஒரு கிராமத்தில் இருந்து விட்டு அங்கே சென்றபோது எனக்கு மிகவும் வெறுமையாக இருந்தது எனக் கூறியிருந்தார்.
Written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications