எல்ஐசியில் பாலிசி எடுத்தவர்கள் ஆரம்ப காலத்தில் முகவர்களிடம் அல்லது எல்ஐசி அலுவலகம் சென்றுதான் பாலிசி தொகையை கட்ட வேண்டிய நிலை இருந்தது
அதன் பிறகு தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு ஆன்லைன் மூலம் பாலிசி தொகையை செலுத்தலாம் என்றும், குறிப்பாக எல்.ஐ.சி இணையதளம் அல்லது செயலி மூலம் பாலிசி தொகையை செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டது
இந்த நிலையில் மேலும் பாலிசிதாரர்களுக்கு புதிய வசதியாக யுபிஐ மூலம் அதாவது PhonePe, Google Pay, Paytm மூலம் பாலிசி தொகையை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
UPI மூலம் எல்.ஐ.சி பிரீமியம்
முன்னதாக, ஆன்லைன் வங்கி, டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மட்டுமே ஆன்லைனில் எல்.ஐ.சி பிரீமியத்தை செலுத்த முடியும். ஆனால் எல்ஐசி தற்போது UPI மூலம் பிரீமியத்தை செலுத்தலாம் என கூடுதல் வசதிகளை பாலிசிதாரர்களுக்கு செய்து கொடுத்துள்ளது.
UPI மூலம் எல்.ஐ.சி பாலிசி இணைப்பு
இப்போது LIC பாலிசிதாரர்கள் இணையதளம் மற்றும் செயலியில் இருந்து மட்டுமின்றி PhonePe, Google Pay, Paytm போன்ற UPI இயங்குதளத்தின் மூலமும் பிரீமியம் தொகையை செலுத்தலாம். எல்ஐசி பாலிசியை யுபிஐ ஐடியுடன் இணைத்து இந்த வசதியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பே மூலம் செலுத்துவது எப்படி?
கூகுள் பே உதவியுடன் எல்ஐசி பிரீமியத்தை செலுத்த விரும்பினால், இதற்கு முதலில் கூகுள் பே செயலியை ஓப்பன் செய்து அதில் பில் பேமெண்ட் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதில் அனைத்தையும் காண்க என்ற பகுதிக்கு சென்று நிதி பிரிவில் உள்ள காப்பீட்டு விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும். இந்த பிரிவில் பல நிறுவனங்களின் பெயர்கள் இருக்கும். அதில் எல்ஐசியை கண்டுபிடித்து அதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் இணைப்பு கணக்கு விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து எந்த பாலிசியின் பிரீமியத்தை செலுத்த வேண்டுமோ அந்த பாலிசி எண்ணை உள்ளிட்டு, மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிட வேண்டும். அதன் பிறகு கூகுள் பே மூலம் ஒவ்வொரு பிரீமியத்தையும் யூபிஐ மூலம் செலுத்தி கொள்ளலாம்.
paytm மூலம் செலுத்துவது எப்படி?
எல்ஐசி பாலிசி பிரீமியம் தொகையை Paytm செயலி மூலம் செலுத்த விரும்பினால், முதலில் Paytm செயலியை மொபைல் போனில் ஓப்பன் செய்ய வேண்டும், அதன் பிறகு நீங்கள் ரீசார்ஜ் மற்றும் பில் பேமென்ட் என்ற பகுதிக்கு சென்று மேலும் பார்க்கவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதில் எல்ஐசி என்பதை கிளிக் செய்து அதனைதேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் பிரீமியம் செலுத்தும் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இதில் பாலிசி குறித்த அனைத்து தகவல்களையும் உள்ளிட்டு, தொடரவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்னர் பாலிசி Paytm உடன் இணைக்கப்படும். Paytm உடன் பாலிசி இணைக்கப்பட்டதும், Paytm மூலம் பிரீமியம் செலுத்தலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications