இனி வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) UPI மூலமாக மிகவும் வேகமாக இந்தியாவிற்கு பணம் அனுப்ப முடியும். NRE மற்றும் NRO கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் UPI சேவைகளை NPCI நீட்டித்துள்ளது. NRI-கள் தங்களது சர்வதேச மொபைல் எண்களை UPI ஆப்ஸ்களுடன் இணைத்து உடனடி பரிவர்த்தனைகளை செய்யலாம். எந்தெந்த நாடுகளில் உள்ள நம்பரை UPI அப்ளிகேஷன்களுடன் இணைக்க முடியும் என்பதைப் பார்ப்போம்.
டிஜிட்டல் பேமென்ட் தளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றெல்லாம் பெட்டிக்கடைகளிலும் பணம் இல்லாப் பரிவர்த்தனை தான் நடக்கிறது. உதாரணமாக சமீபத்தில் வந்த செய்தி தரவுகளின் படி டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மதிப்பு கடந்த மாதத்தை விட 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது யுபிஐ சேவை கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளது.

எப்படி இணைக்கலாம்?: உங்கள் சர்வதேச மொபைல் நம்பரை உங்கள் வங்கிக் கணக்கில் இணைக்கவும்.சர்வதேச மொபைல் நம்பரை பயன்படுத்தி UPI அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதில் பதிவு செய்யவும்.
எந்தெந்த நாடுகளின் மொபைல் நம்பரை இணைக்கலாம்?:
ஆஸ்திரேலியா - (+61)
கனடா - (+1)
பிரான்ஸ் - (+33)
ஹாங்காங் - (+852)
ஓமன் - (+968)
கத்தார் - (+974)
சவுதி அரேபியா - (+966)
சிங்கப்பூர் - (+65)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - (+971)
யுனைடெட் கிங்டம் - (+44)
அமெரிக்கா - (+1)
மலேசியா - (+60)
சர்வதேச மொபைல் எண்களை ஆதரிக்கும் UPI அப்ளிகேஷன்கள்:
பெடரல் பேங்க் (FedMobile)
ICICI பேங்க் (iMobile)
IndusInd பேங்க் (BHIM Indus Pay)
சவுத் இந்தியன் பேங்க் (SIB Mirror+)
AU ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (BHIM AU)
பீம் (BHIM)
போன் பே (PhonePe)
சர்வதேச மொபைல் நம்பரை இணைப்பதை ஆதரிக்கும் வங்கிகள்:
ஆக்சிஸ் பேங்க்
கனரா பேங்க்
சிட்டி யூனியன் பேங்க்
டிபிஎஸ் பேங்க் லிமிடெட்
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
பெடரல் பேங்க்
HDFC பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
IDFC ஃபர்ஸ்ட் பேங்க்
IndusInd பேங்க்
பஞ்சாப் நேஷனல் பேங்க்
சவுத் இந்தியன் பேங்க்
யுபிஐ சேவையை வெளிநாடுகளுக்கும் விரிவுபடுத்தி இருக்கும் NPCI, பல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பெரிய உதவியாக மாறியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்திற்கு வங்கிக்கு செல்லாமலேயே விரைவாகவும், பாதுகாப்பான முறையில் பணத்தை அனுப்ப முடியும்.


Click it and Unblock the Notifications