1999ஆம் ஆண்டு பில்கேட்ஸ் உலகிலேயே முதல் ஆளாக 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து கொண்ட நபராக உருவானார். அப்போது உலகமே பில்கேட்ஸை வியந்து பார்த்தது. அந்த சமயத்தில் உலகத்திலேயே அதிக பணம் கொண்ட நபர் என்ற பெயர் பெற்றார் பில்கேட்ஸ்.
பில்கேட்ஸுக்கு பிறகு பலரும் 100 பில்லியன் டாலர் என்ற எலைட் கிளப்பில் ஒவ்வொருவராக இணைய தொடங்கினர். தற்போது சர்வதேச அளவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 15 என்கிறது ப்ளூம்பெர்க்கின் அறிக்கை. இதில் இரண்டு பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்த 15 பில்லினியர்களின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 13% உயர்ந்துள்ளது.

உலகின் முதல் 500 பணக்காரர்களிடம் இருந்து சொத்தில் கிட்டதட்ட கால் சதவிகிதம் இந்த 100 பில்லியன் டாலர் கிளப்பில் இருக்கும் இந்த 15 நபர்களின் மட்டுமே இருக்கிறது. யார் இந்த 15 பேர் என்பதற்கான பட்டியல்:
1.பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault)
2. ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos)
3. எலன் மஸ்க் (Elon Musk)
4. மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg)
5. லேரி பேஜ் (Larry Page)
6. பில் கேட்ஸ்( Bill Gates)
7. செர்ஜி பிரின் (Sergey Brin)
8. ஸ்டீவ் பால்மெர் (Steve Ballmer)
9. வாரன் பஃபெட் (Warren Buffett)
10. லேரி எலிசன் (Larry Ellison)
11. மைக்கேல் டெல்( Michael Dell)
12. முகேஷ் அம்பானி ( Mukesh Ambani)
13. கேர்லஸ் சிலிம் (Carlos Slim)
14. கௌதம் அதானி (Gautam Adani)
15. ஃபிரான்கோஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (Francoise Bettencourt Meyers)
100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்களின் கிளப்பில் அண்மையில் இணைந்தவர், ஃபிரான்கோஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ். L'Oreal நிறுவனத்தின் வாரிசுதாரரான இவர் 70 வயதில் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு அண்மையில் தான் 101 பில்லியன் டாலராக உயர்ந்தது.
அதே போல மைக்கேல் டெல் , டெல் டெக்னாலஜிஸ் நிறுவன உரிமையாளரான இவர், 59ஆவது வயதில் 113 பில்லியன் சொத்து மதிப்புக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். மெக்சிகோவை சேர்ந்த 84 வயதான கேர்லஸ் சிலிம் 106 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
LVMH நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான 75 வயதான பெர்னார்ட் அர்னால்ட் இந்த பட்டியலில் அதிகபட்ச சொத்து மதிப்பை கொண்டிருக்கிறார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு 222 அமெரிக்க டாலர்கள் ஆகும். அடுத்த படியாக ஜெஃப் பெசோஸ் 208 பில்லியன் டாலர்களை சொத்தாக கொண்டிருக்கிறார்.
இவர்களில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பில்லியன் டாலராகவும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராகவும் உள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications