இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி ரஷ்ய பொருளாதாரத்தை இந்தியா ஊக்குவிக்கிறது , இது இந்த பணம் நேரடியாக உக்ரைன் போரில் பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்.
ரஷ்யா கச்சா எண்ணெய்: இந்தியா ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அந்த நாட்டுக்கு கூடுதலாக 25% இறக்குமதி வரி என மொத்தம் 50 சதவீதம் இறக்குமதி வரியை விதிப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இதனால் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறையும் என எதிர்பார்த்தார். ஆனால் மத்திய அரசு டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்: 2022ஆம் ஆண்டு உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியது. இதனை அடுத்து மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா உடனான அனைத்து வணிக தொடர்புகளையும் துண்டித்து கொண்டன. மற்ற நாடுகளும் ரஷ்யாவுடன் எந்த ஒரு வணிக தொடர்பும் மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்கா அறிவித்தது .ஆனால் ரஷ்யா இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கத் தொடங்கியது.
பேரலுக்கு 30 டாலர் வரை தள்ளுபடி: அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் , தனியார் நிறுவனங்களும் மற்ற நாடுகளை விடுத்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்க முன் வந்தன. ஏனெனில் மற்ற நாடுகளிடமிருந்து வாங்குவதை விட ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் போது தொடக்கத்தில் ஒரு பேரலுக்கு 30 டாலர்கள் வரையிலும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தது. தற்போதும் கூட தள்ளுபடி விலையில் தான் கச்சா எண்ணெய் கிடைக்கிறது.
நேரடி குற்றச்சாட்டு: இந்த சூழலில் தான் அமெரிக்கா அரசின் 50% வரி விதிப்பு என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இருந்தாலும் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இது தொடர்பாக அமெரிக்க அரசின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசண்ட் சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனங்களை நேரடியாக விமர்சனம் செய்திருக்கிறார்.

முகேஷ் அம்பானி மீது விமர்சனம்: இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அதனை எரிபொருளாக மாற்றி ஐரோப்பா உள்ளிட்ட பிராந்தியங்களுக்கு விற்பனை செய்கின்றன இதன் மூலம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் குறிப்பாக பெரும் பணக்கார குடும்பம் ஒன்று 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய ரூபாயின் மதிப்பில் 1.39 லட்சம் கோடி ரூபாய் வரை கூடுதல் லாபம் கண்டிருக்கிறது எனக் கூறியிருக்கிறார். தனியார் நிறுவனங்களான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாராய் எனர்ஜி ஆகியவற்றை தான் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் .
ரிலையன்ஸுக்கு எவ்வளவு லாபம்: இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி ஆகிய இரண்டு நிறுவனங்களும் தான் அதிக அளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதனை எரிபொருளாக மாற்றி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ப்ளூம்பெர்க் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி 2024-25ஆம் நிதி ஆண்டில் இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து 60 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பெட்ரோலியம் பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கின்றன.
அம்பானியின் ஒப்பந்தம்: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு நாளைக்கு 5 லட்சம் பேர்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் நிறுவனத்திடம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . நயாரா எனர்ஜி நிறுவனத்தில் பாதிக்கும் அதிகமான பங்கு ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் நிறுவனத்திடம் தான் இருக்கிறது .
ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி: 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நயாரா நிறுவனம் 3 மில்லியன் மெட்ரிக் டன் எரிபொருட்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது, ரிலையன்ஸ் நிறுவனம் 21 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. 2022இல் உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கும் முன்பு இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளைக்கு 68,000 பேரல்கள் கச்சா எண்ணெய்தான் வாங்கின, பின்னர் படிப்படியாக அதிகரித்து 2023 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு நாளைக்கு 2. 15 மில்லியன் பேரல்கள் என உயர்ந்தது தற்போது அது 1.78 மில்லியன் பேரல்களாக இருக்கிறது. இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெயில் 36 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து தான் வருகிறது.
அமெரிக்க அரசு நேரடியாக ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை விமர்சனம் செய்திருப்பதால் அந்த நிறுவனங்கள் மீது ஏதேனும் பொருளாதார தடை போன்ற நடவடிக்கைகளை எடுக்க உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications