கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் பழைய ஸ்டாக்குகளை விற்பனை செய்வதற்காக அவ்வப்போது தள்ளுபடிகளை அறிவிக்கின்றன. அந்த வகையில் மஹிந்திரா நிறுவனம் தங்களது கார்களுக்கு சுமார் 4 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான XUV400 EV, XUV700 மற்றும் Scorpio N கார்களுக்கு இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் முடிவடைந்து ஆறாவது மாதம் நடைபெற்று வருகிறது.

இதனிடைய 2023 ஆம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனம் தயாரித்த சில கார்கள் இன்னும் விற்பனையாகாமல் இருக்கின்றன. இந்த கார்களை எல்லாம் விற்பனை செய்து ஸ்டாக்குகளை தீர்ப்பதற்காக அந்நிறுவனம் பல்வேறு விதமான தள்ளுபடிகளை வழங்கி உள்ளது.
மஹிந்திரா XUV700 காரை பொருத்தவரை 1.5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் இந்த தள்ளுபடிகள் பிளாட் கேஷ் தள்ளுபடிகளாக கிடைக்கும். AX5 7-சீட்டர் வேரியண்ட் கார்களுக்கு மட்டும் 1.3 லட்சம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனை ஆகி வரக்கூடிய Tata Safari மற்றும் MG Hector Plus ஆகிய கார்களுக்கு போட்டியாக இது விற்பனை ஆகி வருகிறது இதன் எக்ஸ் ஷோரூம் விலை 13.99 லட்சம் ரூபாய் முதல் 27.14 லட்சம் ரூபாய் ஆகும்.
மஹிந்திரா XUV400 EV மாடல் கார்களுக்கு அதிகபட்சமாக 4.4 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 39.4kWh பேட்டரி, 7.2kW ஃபாஸ்ட் சார்ஜர் கொண்ட கார்களுக்கு 3.4 லட்சம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது மஹிந்திரா XUV400 கார், 15.49 லட்சம் முதல்-17.49 லட்சம் வரை விற்பனையாகிறது. Tata Nexon EVக்கு போட்டியாக இந்த கார் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.
மஹிந்திரா Scorpio N காருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 4WD டீசல் வேரியண்ட் கார்களுக்கு நேரடி தள்ளுபடியாக ஒரு லட்சம் ரூபாயும், 2WD பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் கார்களுக்கு 60 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த கார் மார்க்கெட்டில் 13 லட்சம் ரூபாயிலிருந்து 24 லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருகிறது. குறைந்த விலைக்கு புதிதாக கார் வாங்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications