பங்குச்சந்தையில் சம்பாதிப்பதை போல் வேறு எங்குமே சம்பாதிக்க முடியாது.. ஆனால் என்னதான் பிரச்சனை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பங்குச்சந்தையில் சம்பாதிப்பதை போல் வேறு எங்குமே பணம் சம்பாதிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் இன்றைய சூழலில் பங்குச்சந்தையில் பணம்சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு பல லட்சத்தை இழக்கிறார்கள். இதற்கு என்ன காரணம். உண்மையில் பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

 

உங்களிடம் ஒரு லட்சமோ அல்லது 50 ஆயிரமோ இருந்தால் தினமும் ஆயிரங்களை சம்பாதிக்கலாம் என்று தினசரி பங்கு வர்த்தகத்தில் உங்களை ஆசைகாட்டி உள்ளே இழுக்க ஏரளமான பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் இருக்கின்றன.

ஆனால் அப்படி சம்பாதிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

சம்பாதிக்கவில்லை

சம்பாதிக்கவில்லை

இப்படி சொல்ல காரணம் என் நண்பர் ஒருவர் நீண்டகாலமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகிறார். அதுவும் தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் குறைந்த பணத்தை தான் முதலீடு செய்துள்ளார். பங்கு வர்த்தகத்தில் தினசரி வர்த்தகங்களை நன்கு அறிந்த அவரே பலமுறை மொத்த பணத்தையும் இழந்துள்ளார். ஒரு நாள் பெறுவது பல நாள் இழப்பது என்று இன்றுவரை உள்ளார். அவர் இதுவரை என்ன சம்பாதித்தார் என்று கேட்டால் விடை பெரியதாக இல்லை.

நன்று தெரிந்தவர்

நன்று தெரிந்தவர்

இப்படித்தான் இன்று வரை தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு பலரும் பணத்தை இழந்து வருகிறார்கள். சம்பாதித்தவர்கள் என்று பார்த்தால் ஆயிரத்தில் அல்ல லட்சத்தில் ஒருவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதுவும் கூட தினசரி வர்த்தகத்தை நன்றாகத் தெரிந்து, அதன்போக்கில் வர்த்தகம் மேற்கொள்பவர்களால் மட்டுமே பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.

ஆசை வார்த்தைகள்
 

ஆசை வார்த்தைகள்

பங்கு சந்தையில் தினசரி வர்த்தகத்தில் விவரம் இல்லாதவர்கள், அதிக பணம் சம்பாதித்து தருகிறேன் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்தவர்கள், தவறான வழிகாட்டுதலால் சிக்கியவர்கள் போன்றோர் பணத்தை இழந்து நடுத்தெருவில் கூட நிற்கும் நிலை வரலாம்.

நிச்சயம் முடியும்

நிச்சயம் முடியும்

சரி பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கவே முடியாதா என்று கேட்டால் நிச்சயம் சம்பாதிக்க முடியும். ஆனால் நீண்ட கால முதலீடு செய்பவர்களால் மட்டுமே முடியும். உதாரணமாக சொல்வதென்றால் ரியல் எஸ்டேட் துறையை எடுத்துக்காட்டாக சொல்லாம். நீங்களாக தேடி போய் ஒரு இடத்தை வாங்கினீர்கள் என்றால் விலை எக்குத்தப்பாக இருக்கும். அதை அவசரத்துக்கு விற்க போனால் அடிமாட்டு விலைக்குத்தான் வாங்குவார்கள்.

நீண்ட கால முதலீடு

நீண்ட கால முதலீடு

அப்படித்தான் பங்குச்சந்தையும். சரியான நாள் பார்த்து சிறப்பான வளர்ச்சி உள்ள நிறுவன பங்கினை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பத்து வருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் முதலீட்டினை மேற்கொண்டால் நிச்சயமாக சந்தையில் பணம் சம்பாதிக்கலாம்.

பேராபத்து வரும்

பேராபத்து வரும்

ஆனால் பங்குச் சந்தையில் ஒரே நாளில் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள், அப்படி செய்தால் அவதி தான் வரும். தினமும் பல ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு, லட்சங்களை இழந்துவிடாதீர்கள்.

அடிப்படை

அடிப்படை

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க நீங்கள் மேதாவியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டு நீண்ட காலத்திற்கு பங்குகளை வாங்கி வைத்து விற்றால் நிச்சயம் சம்பாதிக்கலாம்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nowhere else can you earn as much as you earn in the stock market

Nowhere else can you earn as much as you earn in the stock market, but what are the problems are here
Story first published: Friday, November 22, 2019, 14:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X