மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (NPCI) யூபிஐ பண பரிமாற்றம் முறையில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 30% சந்தைப் பங்கு வரம்பு விதிக்கப்படும் முடிவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிக்கையில், 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த வரம்பு நடைமுறைப்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது யூபிஐ பண பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனம் 30 சதவீதத்திற்கும் அதிகமாக சந்தை பங்கீட்டை வைத்திருக்க கூடாது என்ற வரம்பை கொண்டு வர மத்திய நிதியமைச்சகம் நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது.

முன்னதாக, இந்த வரம்பு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வரம்பு நடைமுறைப்படுத்துவதை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இந்த விதிமுறை கொண்டு வந்தால் UPI தளத்தை பயன்படுத்தும் மக்களின் வளர்ச்சி பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக NPCI அமைப்பு பல்வேறு பிரதிநிதிகளுடன் பலக்கட்ட விவாதங்கள் நடத்தியுள்ளது, இந்த கட்டத்தில் சந்தைப் பங்கு வரம்பை நடைமுறைப்படுத்துவது மூலம் UPI அமைப்பின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒரு நிறுவனத்திற்கு 30 சதவீதம் வரம்பு விதிக்கப்படுவது மூலம் அதன் பயன்பாட்டில் தற்போது இருக்கும் வளர்ச்சியைத் தடுக்கக்கூடும் என்று விவாதத்தின் முடிவில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதேவேளையில் தற்போதைய யூபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அளவை விட 10 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கும் எனவும் இந்த விவாத கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் 2026 வரையிலான கால நீட்டிப்பு PhonePe மற்றும் Google Pay போன்ற ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களுக்கு முக்கியமான ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. இதேவேளையில் பேடிஎம், இப்போபே, Navi, Cred போன்ற நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், NPCI தரவுகள் PhonePe சுமார் 7.4 பில்லியன் UPI பரிவர்த்தனைகளை செயலாக்கியதாகவும், Google Pay சுமார் 5.7 பில்லியன் பரிவர்த்தனைகளை எளிதாக்கியதாகவும் தெரிவித்தன.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications