இந்தியர்கள் அன்றாடம் பயன்படுத்தும் டிஜிட்டல் பேமென்ட் முறையாக யுபிஐ பண பரிவர்த்தனை மாறி இருக்கிறது. யுபிஐ பணப்பரிவர்த்தனையை நிர்வகித்து வரக்கூடிய என்பிசிஐ எனப்படும் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு இந்த நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது . அந்த வகையில் வரும் வரும் 15ஆம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனை முறையில் முக்கியமான ஒரு மாற்றம் அமலுக்கு வர இருக்கிறது .
என்பிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைக்கான வரம்புகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. இதன்படி ஒரு நாளுக்கான யுபிஐ பரிவர்த்தனை லிமிட் என்பது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது . வரும் செப்டம்பர் 15 ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றங்கள் அமலாகின்றன.

கிரெடிட் கார்டு: யுபிஐ மூலம் கிரெடிட் கார்டுகளுக்கான பில் பேமென்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலுத்த முடியும். அது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணமாக செலுத்தலாம் என்றும், ஒரு நாளைக்கு 6 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
கடன் ஈஎம்ஐ: நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவது அல்லது கடனுக்கான இஎம்ஐ தொகையை செலுத்துவதற்கு யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஒரு பரிவர்த்தனைக்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்தலாம் இது ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இது அதிகபட்சமே 2 லட்சம் ரூபாயாக தான் இருந்தது.
பங்குச்சந்தை முதலீடு & காப்பீடு: பங்குச்சந்தை முதலீடுகள் மற்றும் காப்பீடு திட்டங்களுக்கான கட்டணத்தை யுபிஐ மூலம் செலுத்த இதற்கு முன்பு ஒரு நாளைக்கு அதிகபட்சமே 2 லட்சம் ரூபாய் என இருந்தது. இந்த வரம்பு செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் அனுப்பலாம் என்றும் ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது. எனவே பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரை யுபிஐ பரிவர்த்தனை வாயிலாகவே பணத்தை அனுப்ப முடியும் .
போக்குவரத்து செலவு : நீங்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருக்கிறீர்கள் அல்லது விமான டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்பன போன்ற போக்குவரத்து சார்ந்த செலவுகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை யுபிஐ வாயிலாக பணம் அனுப்பலாம். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வரி : அரசாங்கத்துக்கு வரி செலுத்த யுபிஐ பரிவர்த்தனை முறையை பயன்படுத்தினால் இதுநாள் வரை அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என இருந்தது அதனை தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் என உயர்த்தி இருக்கின்றனர்.
தனிநபர் பரிவர்த்தனை: இவ்வாறு யுபிஐ பரிவர்த்தனைக்கான வரம்புகளை உயர்த்தி இருப்பதன் மூலம் சிறு சிறு தொகையாக அதிக எண்ணிக்கையில் நாம் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டிய அவசியம் இனி கிடையாது. ஆனாலும் ஒரு நபர் மற்றொரு தனிப்பட்ட நபருக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பு ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் என்பதிலிருந்து இன்னும் மாற்றப்படவில்லை . எனவே நீங்கள் இன்னொரு நபருக்கு பணம் அனுப்புகிறீர்கள் என்றால் ஒரு நாளைக்கு யுபிஐ வாயிலாக ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுப்ப முடியும். இந்த புதிய மாற்றம் வணிக ரீதியிலான பரிவர்த்தனைகளுக்கே பொருந்தும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications