வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் யுபிஐ சேவையை வழங்குவதற்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் யுபிஐ கட்டணங்கள் தொடர்பான ஒரு முடிவு இது. இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப்பின் 50 கோடி பயனர்களில் 10 கோடி பேர் மட்டுமே யுபிஐ சேவைகளை வழங்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது இந்த கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் அனைவரும் இனி வாட்ஸ்அப் பே மூலம் பணம் செலுத்தலாம். அனைத்து பயனர்களுக்கும் யுபிஐ சேவையை வழங்க என்பிசிஐ அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் யுபிஐ சந்தையில் போட்டி தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் பே: வாட்ஸ்அப் பே அறிமுகப்படுத்தப்பட்டபோது, என்பிசிஐ கடுமையான விதிமுறைகளை முன்வைத்தது. அதில், 50 கோடி பயனர்களைக் கொண்ட நிறுவனத்திற்கு யுபிஐ சேவையை அனுமதிப்பது சந்தையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்ற மதிப்பீடுதான் இதற்கு முக்கியக் காரணம். இந்த காரணத்திற்காகவே மொத்த பயனர்களில் ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே யுபிஐயை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
NPCI ஆனது வாட்ஸ்அப் பே-இன் செயல்திறனைக் கண்காணித்து யுபிஐ கட்டமைப்பிற்கு இணங்குவதை உறுதி செய்தது. இப்படித்தான் தற்போது படிப்படியாக வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, நவம்பர் 2022 இல், வாட்ஸ்அப் பே வரம்பு 10 கோடியாக அதிகரிக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான பயனர்களை அடைவதற்கு முன்பு பாதுகாப்பை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப் பே மீதான உச்சவரம்பு நீக்கம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் பிரதான சந்தையில் வாட்ஸ்அப் பேவை ஏற்றுக்கொள்வதை அதிகரிக்கும் என்ற ஊகங்கள் உள்ளன.
தற்போது, Google Pay மற்றும் Phone Pay ஆகியவை நாட்டில் UPI பரிவர்த்தனைகளில் முன்னணியில் உள்ளன. வாட்ஸ்அப்பின் வரம்பு நீக்கப்பட்டதன் மூலம் இந்நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். வாட்ஸ்அப் பே தற்போது மாதாந்திர பயன்பாட்டின் அடிப்படையில் 11வது இடத்தில் உள்ளது. கடந்த நவம்பரில் இந்த ஆப் மூலம் ரூ.3,890 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது. முதல் போன் பே மூலம் 10.88 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
மூன்றாம் தரப்பு பயன்பாட்டு சேவை வழங்குநர்களுக்குப் பொருந்தக்கூடிய அனைத்து தற்போதைய வழிகாட்டுதல்களுக்கும் வாட்ஸ்அப் பே இணங்க வேண்டும் என்றும் என்பிசிஐ தெரிவித்துள்ளது. எனவே, வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துவதற்கான சிறப்பு ஐகானைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்யலாம்
வாட்ஸ்அப் யுபிஐ எப்படி ரெசிஸ்ட்ர் செய்ய வேண்டும்?: WhatsApp UPI ஐ செட் செய்ய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
வாட்ஸ்அப்பைத் செயலியை ஓபன் செய்து செட்டிங்கிற்கு செல்லவும்
அதில், பேமெண்டுகளை தேர்ந்தெடுக்கவும்
புதிய கட்டண முறையை சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
பட்டியலில் இருந்து உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் தொலைபேசி எண்ணைச் சரிபார்க்கவும்
உங்கள் யுபிஐ பின்னை அமைக்கவும்
தொடர்ந்து செயல்முறையை முடிக்க முடிந்தது என்பதைத் தட்டவும் அவ்வளவுதான் நீங்கள் ரெஜிஸ்டர் செய்து விட்டீர்கள்
அதேபோல், வாட்ஸ்அப் பே பயன்படுத்தி பணம் அனுப்ப, நீங்கள்:
பணம் அனுப்ப வேண்டிய நபரின் வாட்ஸ்அப் சேட்-ஐ திறக்கவும்
தொடந்து கீழே உள்ள வலது மூலையில் உள்ள ரூ ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்
பின்னர் தொகையை உள்ளிடவும்
உங்கள் யுபிஐ பின்னை உள்ளிட்டு கட்டணத்தைச் சரிபார்க்கவும்
மற்ற யுபிஐ: தற்போது, இந்தியாவில் மக்கள் யுபிஐ பரிவர்த்தனையில் போன்பே மற்றும் கூகுள்பே ஆதிக்கம் செலுத்துகின்றன. நவம்பர் 2024 நிலவரப்படி, போன்பே சந்தையில் 47.8%, கூகுள் பே 37% ஆகியவற்றைக் கொண்டிருந்தது. தரவுகளின்படி, ஒரே மாதத்தில் 13.1 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகளைச் செய்துள்ளனர். அதேவேளையில், யுபிஐ சந்தையில் உள்ள போட்டியாளர்களில் பேடிஎம், நவி, கிரெட் மற்றும் அமேசான் பே போன்ற ஃபின்டெக் நிறுவனங்கள் உள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications