இந்தியாவில் யுபிஐ செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை மேற்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . எங்கு சென்றாலும் நம்முடைய கையில் பணத்தை கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை. ஒரு கியூ ஆர் கோடு அல்லது மொபைல் நம்பரை உள்ளீடு செய்தாலே யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு பணத்தை அனுப்பிவிடலாம் .
நண்பர்களுக்கு பணம் அனுப்புவது, ஒரு பொருளை வாங்கும் போது அதற்கான கட்டணத்தை செலுத்துவது, கரண்ட் பில், வைஃபை ரீசார்ஜ் உள்ளிட்டவற்றை செலுத்துவது என அனைத்திற்குமே யுபிஐ பயன்படுத்துகிறோம். யுபிஐ வசதி நாடு முழுவதும் அனைவராலும் மிக எளிமையாக பயன்படுத்தப்படும் ஒரு வசதியாக மாறியிருக்கிறது.

கூகுள் பே, பேடிஎம் ,போன் பே என பல்வேறு செயலிகள் வாயிலாக நாம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்கிறோம். அன்றாடம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய செயலிகளாக இவை மாறி இருக்கின்றன. இந்தியாவில் என்பிசிஐ எனப்படும் தேசிய பரிவர்த்தனை கழகம் தான் யுபிஐ பரிவர்த்தனைகளை மேலாண்மை செய்கிறது.
வைஃபை ரீசார்ஜ், டிடிஹெச் கட்டணம் போன்றவற்றை தவறாமல் மாதந்தோறும் செலுத்த யுபிஐ செயலிகளிலேயே ஆட்டோ பே எனப்படும் வசதி உள்ளது. இதனை எனேபில் செய்துவிட்டால் போது மாதம் தோறும் அந்த தேதியில் பணம் தானாகவே டெபிட் ஆகிவிடும்.
இவ்வாறு பல்வேறு செயலிகளில் இருக்கும் ஆட்டோ பே மேன்டேட்டை ஒரே இடத்தில் மேலாண்மை செய்யும் வசதியை என்பிசிஐ கொண்டு வந்துள்ளது. இதற்காக ஒரு போர்ட்டலையும் உருவாக்கி இருக்கிறது. upihelp.npci.org.in என்ற ஒரே தளத்தில் அனைத்து யுபிஐ செயலிகளில் இருக்க கூடிய ஆட்டோபேவையும் பார்வையிட்டு மேலாண்மை செய்யலாம்.
அதாவது ஆட்டோபேவை ரத்து செய்வது, மாற்றி அமைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.இது தவிர ஒரு யுபிஐ செயலியில் இருக்கும் ஆட்டோ பே மேன்டேட்டை எளிதாக வேறொரு யுபிஐ செயலிக்கு மாற்றலாம். உதாரணமாக வைஃபை ரீசார்ஜூக்கு கூகுள் பேவில் நீங்கள் ஆட்டோ பே வைத்திருந்தால் அதனை ஒரே கிளிக்கில் போன்பேவுக்கு மாற்றி கொள்ளலாம்.
யுபிஐ பயன்பாட்டை எளிமையாக்கவும் , ஆட்டோ பேமெண்டுகளை கையாள்வதை எளிமைபடுத்தவும் என்பிசிஐ இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது . என்பிசிஐ இது தொடர்பாக அனைத்து யுபிஐ செயலிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அக்டோபரிலேயே அனுப்பியது .அதில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைத்து யுபிஐ செயலிகளும் இந்த ஆட்டோ பே தொடர்பான மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
எனவே ஜனவரி முதல் உங்கள் யுபிஐ செயலியிலேயே ஆட்டோ பேமெண்ட்களை மேலாண்மை செய்யும் தனிப்பிரிவை காட்ட போகிறது. அதில் எதற்கெல்லாம் ஆட்டோ பே உள்ளது என்பதையும் தெரிந்து கொள்லலாம், ஒரு செயலில் இருந்து மற்றொரு செயலிக்கும் மாற்றலாம்.


Click it and Unblock the Notifications