நைஜீரியா: NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL), பேங்க் ஆஃப் நமிபியா உடன் சேர்ந்து, யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) போன்ற உடனடி டிஜிட்டல் கட்டண முறையை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது ஆப்பிரிக்கா நாட்டுக்கு கொண்டு வரப்படும் யுபிஐ முறையாகும்.
இந்த ஒப்பந்தம் கடந்த வியாழன் அன்று கையெழுத்தானது. NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் ஆப்ரிக்க நாட்டிற்காக, இந்த UPI வசதியை உருவாக்க உள்ளது. மற்றொரு நாட்டில் UPI போன்ற அமைப்பை அறிமுகப்படுத்த, முன்னணி வங்கியுடன் NPCI கூட்டுசேர்வது, இதுவே முதல் முறை ஆகும்.

நமீபியாவில் வசிக்கும் தனி நபர்கள் மற்றும் வணிகர்களுக்கு உதவும் வகையில், உடனடியாக பணப்பரிவர்த்தனைகளை உருவாக்குவதற்காக, இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை நபிவியாவில் உள்ள மக்களின் நலனுக்காக கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளதாக NIPL நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள மக்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்வது எளிதாகும். உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பணப்பரிவர்த்தனைகள் செய்யவும் இந்த யூபிஐ முறை உதவியாக இருக்கும். மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இன்னும் எளிதாக டிஜிட்டல் கட்டணங்களை இருக்கும் இடத்திலிருந்து செய்ய முடியும். மேலும் மிகவும் பின்தங்கிய சமூகத்திற்கு சிறந்த நிதி சேவைகளை வழங்க முடியும். இது எதிர்காலத்தில் தேவைப்படும் நல்ல முன்னேற்றங்களை தரும் என்று NPCI இன்டர்நேஷனல் CEO ரித்தேஷ் சுக்லா கூறியுள்ளார்.
உலகளவில் யூபிஐ-ஐ விரிவுபடுத்துவதற்கான NPCIஇன் முயற்சிகள் பிரான்ஸ், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்கு அடுத்து, ஆப்பிரிக்காவிலும் தொடர்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் NPCI, "UPI-Pay Now" என்ற டிஜிட்டல் முறையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள், தங்களது வங்கி கணக்குகளில், இந்தியாவிலிருந்து நேரடியாக பணத்தைப் பெற முடியும். அதேபோல், சிங்கப்பூரில் தங்கி வேலை பார்க்கும் இந்தியர்கள், அவர்களது வங்கி கணக்குகளில் இருந்து இந்தியாவில் இருக்கும் குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியும்.
அதேபோல், இந்த ஆண்டு பிப்ரவரியில், பிரான்சில் UPI கட்டணங்களைச் செயல்படுத்த, இ-காமர்ஸ் மற்றும் கட்டண நிறுவனமான லைராவுடன் NPCI கூட்டு சேர்ந்தது. பிரான்ஸை, தொடர்ந்து அதே மாதத்தில் UPI சேவைகள் இலங்கை மற்றும் மொரீஷியஸில் தொடங்கப்பட்டன.
UPI சேவைகள் அனைத்து மக்களின் நேரத்தையும் சேமித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இன்றெல்லாம், வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுப்பது அரிதாகிவிட்டது. வீட்டிலிருந்தபடியே UPI செயலிகள் மூலம் EB பில் கட்டுவது, ரீசார்ஜ் செய்வது, டிக்கெட் புக்கிங் செய்வது என அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். எனவே ஆப்பிரிக்க நாட்டு மக்களும், வரும் நாட்களில் இது போன்ற டிஜிட்டல் பேமெண்ட் முறைகளால் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications