சென்னை: தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) அதன் உறுப்பினர்களுக்கு சேவையை மேம்படுத்தும் வகையில், அதன் அமைப்புகளை மாற்றி அமைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களில், NPS செயல்பாடுகளில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையில் NPS செயல்பாடுகளில் செய்யப்பட்ட மாற்றங்களை சுருக்கமாகப் பார்ப்போம். இதன் மூலம் NPS உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளை எளிதாக நிர்வகிக்க முடியும்.
NPS உறுப்பினர்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட முக்கியமான மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெயர் பொருத்தத்துடன் வங்கி சரிபார்ப்பு: NPS திட்டத்தில் சேமிக்கப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும், உறுப்பினர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை மாற்றுவதற்கும் பெயர் பொருத்தத்துடன் கூடிய வங்கி சரிபார்ப்பை செய்ய வேண்டும். இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
NPS ரெகுலர், NPS லைட் மற்றும் APY கணக்குகளில் மாற்றம்: பணம் திரும்பப் பெறுதல் கோரிக்கைகளைத் தொடங்கும் போது, ஆவணங்களைப் பதிவேற்றும் வரம்பு 2 MB இல் இருந்து 5 MB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதிர்வுக்கு முந்தைய காலத்தில் திரும்பப் பெறுதல் (Pre-Mature Exit), ஓய்வு (Superannuation), ஊனம் (Incapacitation) போன்ற காரணங்களால் வித்ட்ரா செய்யும்போதும் இது பொருந்தும்.
தனிப்பட்ட மொபைல் நம்பர்/மெயில் ஐடி: NPS திட்டத்தில் பணம் திரும்பப் பெறுதல் அல்லது திட்டத்திலிருந்து வெளியேறுதல் (NPS withdrawal/exit) போன்ற சமயங்களில், உறுப்பினர்கள் தனது NPS கணக்கில் தனிப்பட்ட மொபைல் நம்பரை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
NPS லைட் பாஸ்வேர்ட்: NPS லைட் கணக்குகளுக்கான பாஸ்வேர்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாஸ்வேர்ட் கீழ்கண்ட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
1. 8 முதல் 16 எழுத்துகள் வரை இருக்க வேண்டும் (8 to 16 characters)
2. குறைந்தது ஒரு பெரிய எழுத்து (A-Z) இருக்க வேண்டும் (upper case (A-Z))
3. குறைந்தது ஒரு சிறிய எழுத்து (a-z) இருக்க வேண்டும் (lower case (a-z))
4. குறைந்தது ஒரு நம்பர் (0-9) இருக்க வேண்டும் (number (0-9))
5. பின்வரும் ஸ்பெஷல் கேரக்டர்களில் ஒன்று இருக்க வேண்டும் (!@#$A&A_)
புதிய பாதுகாப்பான பாஸ்வேர்ட், உங்கள் NPS லைட் கணக்கை மோசடி மற்றும் முறைகேடான செயல்களில் இருந்து பாதுகாக்க உதவும்.
NPS ரெகுலர் - உறுப்பினர்களின் விவரங்களில் மாற்றம் செய்வது: NPS உறுப்பினர்கள் தங்கள் கணக்கு விவரங்களை புதுப்பிக்க புதிய செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை மாற்ற ஆதார ஆவணங்களை கட்டாயம் அப்லோட் செய்ய வேண்டும்.
1. பெயர் மாற்றம்
2. பணிக்கு சேர்ந்த நாள்
3. பிறந்த தேதி
4. ஓய்வு பெறும் நாள்
உறுப்பினர்கள் தங்கள் விவரங்களப் புதுப்பிக்கும் போது, ஆதார ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து பதிவேற்றுவது கட்டாயம். இது சரியான விவரங்கள் CRA பதிவேடுகளில் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
NPS ரெகுலர் - வங்கி விவரங்களை பல்க் பிராசசிங் செய்தல்: ஒரு நிறுவனத்தின் HRIMS தகவல்களின்படி வங்கி விவரங்களைப் பதிவேற்ற நோடல் அலுவலக உள்நுழைவுத் தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நோடல் அலுவலகம் தங்கள் கீழ் உள்ள NPS உறுப்பினர்களின் சம்பள வங்கி விவரங்களை ஒரே நேரத்தில் பல்க் அப்லோட் செய்ய முடியும்.
NPS ரெகுலர் - Systematic Lumpsum Withdrawal: ஓய்வூதியம் பெறும் சமயத்தில், NPS ரெகுலர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தங்கள் கணக்கு தொகையின் ஒரு பகுதியை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தான் பெற விரும்பும் தொகையை தேர்வு செய்து கொள்ளலாம்.
NPS பரிவர்த்தனை அறிக்கையில் மாற்றங்கள்: முன்னதாக, NPS பரிவர்த்தனை அறிக்கையில் ஒவ்வொரு நிதி ஆண்டுக்கான XIRR மதிப்பு சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த தகவல் Online Transaction Statement, IVR statement, Monthly Statement போன்ற அறிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications