பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்காக NPS வாத்சல்யா திட்டத்தை அரசாங்கம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இது ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். தங்கள் குழந்தையின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பும் பெற்றோருக்கு NPS வாத்சல்யா திட்டம் சிறந்த ஒன்றாக அமைகிறது. இந்தத் திட்டத்திற்காக கணக்கு திறக்கும் வசதியை எளிதாக்கும் வகையில் பல வங்கிகள் இதன் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்கள் தங்கள் மைனர் குழந்தைகளுக்கு எளிதாக ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
உங்கள் மைனர் குழந்தைக்கு NPS வாத்சல்யா திட்டத்திற்கு கணக்கு திறக்கும் வசதியை எந்த வங்கிகள் வழங்குகின்றன?:

ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் பேங்க், கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா உட்பட பல வங்கிகளில் NPS வாத்சல்யா கணக்கைத் திறக்கலாம். இந்த வங்கிகள் தேசிய ஓய்வூதிய அமைப்பு மூலம் தங்கள் குழந்தைகளின் நிதி எதிர்காலத்திற்கு முதலீடு செய்வதற்கான வசதியான வழியை பெற்றோருக்கு வழங்குகின்றன.
NPS வாத்சல்யா திட்டத்தின் அம்சங்கள்:
தகுதி: பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் மைனர் குழந்தைகளுக்காக NPS வாத்சல்யா கணக்கைத் திறக்கலாம். மைனர்களின் பிரத்யேக நன்மைக்காக அவர்கள் 18 வயது வரை கணக்கு பாதுகாவலரால் நிர்வகிக்கப்படும்.
ஓய்வூதிய கணக்கு எண்: NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்யும் குழந்தைகளுக்கு ஒரு தனிப்பட்ட ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) மைனர் பெயரில் மத்திய பதிவு நிறுவனம் (CRA) மூலம் வழங்கப்படும்.
NPS - டயர் 1 க்கு மாறுதல்: மைனர் 18 வயதை அடைந்தவுடன், அனைத்து NPS வாத்சல்யா கணக்குகளும் NPS- டயர் 1 கணக்கிற்கு மாற்றப்படும்.
KYC புதுப்பிப்பு: மைனர் குழந்தைகள் 18 வயதை அடைந்த 3 மாதங்களுக்குள் புதிய KYC செயல்முறையை முடிக்க வேண்டும்.
குறைந்தபட்ச முதலீடு: NPS வாத்சல்யாவிற்கு குறைந்தபட்ச வருடாந்திர முதலீடாக ரூ. 1,000 முதல் கணக்கைத் தொடங்கலாம். இதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.
திரும்பப் பெறுதல் விருப்பங்கள்: NPS வாத்சல்யா திட்டத்தில் இருந்து குழந்தை 18 வயதை அடையும் முன், குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், தொகையை திரும்பப் பெறலாம். கணக்குத் தொடங்கி 3 ஆண்டுகள் முடிவடைந்தவுடன், கணக்கு வைத்திருப்பவர்கள் மொத்த பங்களிப்புத் தொகையில் 25% வரை திரும்பப் பெறத் தகுதியுடையவர்கள்.
NPS வாத்சல்யா திட்டத்தை ஆன்லைனில் திறப்பது எப்படி?: NPS வாத்சல்யா திட்ட கணக்கை ஆன்லைனில் திறப்பதற்கான ஸ்டெப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
eNPS இணையதளத்தைப் பார்வையிடவும்: NPS வாத்சல்யா திட்ட கணக்கைத் தொடங்க முதலில் அதிகாரப்பூர்வ eNPS தளத்திற்குச் செல்லவும்.
ரெஜிஸ்டர் செய்யவும்: கீழே ஸ்க்ரோல் செய்து, "NPS Vatsalya (Minors)" என்ற பிரிவின் கீழ் உள்ள "Register Now" என்பதைக் கிளிக் செய்யவும்.
பாதுகாவலரின் விவரங்களை வழங்கவும்: பாதுகாவலரின் பிறந்த தேதி, பான் நம்பர், மொபைல் நம்பர் மற்றும் மெயில் முகவரியை என்டர் செய்யவும். பின்னர் "Begin Registration" என்பதைக் கிளிக் செய்யவும்.
OTPயைச் சரிபார்க்கவும்: பாதுகாவலரின் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ என்டர் செய்யவும். OTP சரிபார்ப்புக்குப் பிறகு, ஒப்புகை எண் திரையில் தோன்றும். அதன் பின் "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆவணங்களைப் பதிவேற்றவும்: மைனர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரின் விவரங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, "Confirm" என்பதைக் கிளிக் செய்யவும்.
முதலீடு: ஆரம்ப வைப்புத் தொகையாக ரூ. 1,000-த்தை செலுத்தவும். அதன் பின் PRAN நம்பர் உருவாக்கப்படும், மேலும் சிறுவரின் பெயரில் NPS வாத்சல்யா கணக்கு திறக்கப்படும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications