உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக.. ரூ.10,000 முதலீடு செய்தால் ரூ.11.05 கோடி கிடைக்கும் திட்டம்!

NPS வாத்சல்யா என்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். NPS வாத்சல்யா கணக்கு என்பது குழந்தைகளுக்கான ஒரு சிறப்புத் திட்டமாகும். குழந்தை 18 வயதை அடையும் போது, இந்த கணக்கு தானாகவே NPS டயர்-I கணக்காக மாற்றப்படும். இந்தப் புதிய திட்டம் அனைத்துக் குடிமக்களுக்கும் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு கூட்டு வட்டி கிடைப்பதால் உங்களுடைய வருமானம் குறிப்பிட்ட காலத்திற்குள் சீராக வளரும்.

NPS வாத்சல்யா திட்டமானது, PFRDA அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மைனர்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோர்கள் தங்கள் மைனர் குழந்தைகளுக்காக அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே முதலீடு செய்யத் தொடங்க அனுமதிக்கிறது. குழந்தை 18 வயதை அடைந்தவுடன் பங்கேற்பதை நிறுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

 உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக.. ரூ.10,000 முதலீடு செய்தால் ரூ.11.05 கோடி கிடைக்கும் திட்டம்!

ஒரு குழந்தைக்கு நீண்ட காலக் கண்ணோட்டத்துடன் ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதே NPS வாத்சல்யா திட்டத்தின் முக்கிய நோக்கம். NPS வாத்சல்யாவின் கீழ், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயரில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம். குழந்தை 18 வயதை அடைந்ததும், மைனர் குழந்தைகளின் கணக்குகள் வழக்கமான NPS கணக்குகளுக்கு தடையின்றி மாற்றப்படும்.

NPS வாத்சல்யா கால்குலேட்டர்: ஒருவர் தனது குழந்தைக்கு NPS வாத்சல்யா திட்டத்தில் ஆண்டுக்கு 10,000 ரூபாய் முதலீடு செய்தால்.. அதாவது மாதத்திற்கு 1,000 ரூபாய்க்கு குறைவாக முதலீடு செய்தால் அந்த மைனர் குழந்தைக்கு 60 வயதாகும் போது 11.05 கோடியை பெறலாம்.

சண்டிகரில் உள்ள பிரஸ் இன்பர்மேஷன் பீரோ தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் (முன்னர் ட்விட்டர்) NPS வாத்சல்யா திட்டம் குறித்த போஸ்டைப் பதிவிட்டுள்ளது.

ஒரு ஆண்டிற்கான முதலீடு: ரூ 10,000

முதலீட்டு காலம்: 18 ஆண்டுகள்

18-ஆம் வயதில் எதிர்பார்க்கப்படும் கார்பஸ்: 10 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் ரூ.5 லட்சம்

60-ஆம் வயதில் எதிர்பார்க்கப்படும் கார்பஸ்:

10 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் ரூ 2.75 கோடி

11.59 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் ரூ 5.97 கோடி

12.86 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் ரூ 11.05 கோடி

NPS வாத்சலயா திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டத்தை (NPS) அடிப்படையாகக் கொண்டது. NPS தொடக்கத்திலிருந்து லாபகரமான வருமானத்தை வழங்கியுள்ளன.

NPS வாத்சல்யா திட்டத்தில் இருந்து குழந்தை 18 வயதை அடையும் முன், குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், தொகையை திரும்பப் பெறலாம். கணக்குத் தொடங்கி 3 ஆண்டுகள் முடிவடைந்தவுடன், கணக்கு வைத்திருப்பவர்கள் மொத்த பங்களிப்புத் தொகையில் 25% வரை திரும்பப் பெறத் தகுதியுடையவர்கள்.

இந்த விருப்பம் குழந்தை 18 வயதை அடையும் வரை 3 முறை கிடைக்கும். PFRDA வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, கல்விச் செலவுகள், குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றுக்கு 75 சதவீத தொகையைத் திரும்பப் பெறலாம்.

வாடிக்கையாளர்கள் NPS அமைப்பிலிருந்து வெளியேற முடிவு செய்தால், திரட்டப்பட்ட கார்பஸில் குறைந்தபட்சம் 80% வருடாந்திரத் திட்டத்தில் மீண்டும் முதலீடு செய்யப்பட வேண்டும், மீதமுள்ள 20% மொத்தத் தொகையாக திரும்பப் பெறலாம். மொத்த கார்பஸ் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், கணக்கு வைத்திருப்பவர்கள் முழுத் தொகையையும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+