இந்திய அரசு மக்களின் நிதியியல் பாதுகாப்பிற்குப் பல திட்டங்களை அறிவித்திருக்கும் வேளையில், 2024-25 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் NPS Vatsalya என்னும் திட்டம் குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் சாதாரண என்பிஎஸ் திட்டம் போலவே இயங்கும் காரணத்தால் பிற சந்தை முதலீட்டு திட்டத்தை காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட Sukanya Samriddhi Yojana - SSY திட்டத்தை காட்டிலும் அதிகம் லாபம் கிடைக்கக் கூடியதாக உள்ளது இந்த NPS Vatsalya திட்டம்.

SSY Vs NPS Vatsalya: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தை போலவே குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு NPS Vatsalya திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் இது சாதாரண என்பிஎஸ் திட்டம் போலவே இயங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
18 வயதில் முதிர்வு: இதேபோல் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் இருப்பது போலவே குழந்தைகள் 18 வயதுக்கு வந்த உடன் கணக்கை முதிர்ச்சி அடையும் வசதி போலவே NPS Vatsalya திட்டம் குழந்தைகள் 18 வயது வந்த பிறகு, இக்கணக்கில் சேமிக்கப்பட்ட தொகை, நிலையான என்.பி.எஸ். கணக்கிற்கு மாற்றப்படும். குழந்தைகளுக்கு விருப்பும் இல்லாத பட்சத்தில் இதை NON NPS கணக்காகவும் மாற்றிக்கொள்ள முடியும்.
முதலீட்டு முறை: சுகன்யா சம்ரித்தி யோஜனா வெறும் சிறுசேமிப்பு திட்டமாகவே இயங்கும் காரணத்தால் இதில் கிடைக்கும் வட்டி வருமானம் வங்கிகளில் வழங்கப்படும் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை விட அதிகமாக இருந்தாலும் NPS திட்டத்திற்கு இணையாக இருக்காது.
இதற்கு முக்கியமான காரணம் NPS கணக்கில் முதலீடு செய்யப்படும் பணம், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கில் முதலீடு செய்யப்படும் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவது இல்லை, இதனால் வட்டி வருமானம் குறைவாகவே கிடைக்கும்.
வட்டி வருமானம்: 2024-2025 நிதியாண்டுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் 8.20% ஆகும். ஆனால் என்பிஎஸ் கணக்கில் செய்யப்படும் முதலீடு மற்றும் அதன் பங்கு பொறுத்து 12 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமாக வட்டி வருமானத்தைப் பெற முடியும்.
முக்கிய பலன்: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்குப் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்ய முடியும். NPS Vatsalya திட்டத்திற்கு தற்போது அடிப்படை வரம்பு இல்லை, ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற வித்தியாசமும் இல்லை.
வரி சலுகை: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும். ஆனால் NPS திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 80சி இல்லாமல் 80CCB (1B) கீழ் தனிப்பட்ட முறையில் 50000 ரூபாய் வரையில் வரி சலுகை பெற முடியும்.
ஜாக்பாட்: NPS Vatsalya திட்டத்தைத் தேர்வு செய்தால் 80சி முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு 80CCB (1B) கீழ் தனிப்பட்ட முறையில் 50000 ரூபாய் வரையில் வரிச் சலுகை பெற முடியும். இதுவரையில் NPS திட்டத்தில் முதலீடு செய்யாதவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக இருக்கும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications