நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டமான NPS வாத்சால்யா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் NPS வாத்சால்யா திட்டத்திற்கான ஆன்லைன் தளத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் புதிதாக பதிவு செய்யப்படும் குழந்தைகளுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) அட்டைகளையும் வழங்கவுள்ளார்.
இந்த புதிய திட்டம் இந்தியாவின் ஓய்வூதிய முறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக ஆரம்பத்தில் முதலீடு செய்யத் தொடங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. NPS வாத்சால்யா திட்டத்தை PFRDA அமைப்பு நிர்வகிக்கவுள்ளது.

NPS வாத்சல்யா என்றால் என்ன?: NPS வாத்சல்யா, ஓய்வூதியக் கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகச் சேமிக்க முடியும் மற்றும் இந்தத் திட்டத்திற்கு கூட்டு வட்டி கிடைக்கிறது. இதனால் வருமானம் நன்றாக வளரும்.
NPS வாத்சல்யா திட்டத்தில் பெற்றோர்கள் ஆண்டுக்கு 1,000 ரூபாய் முதல் சேமிக்கலாம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கும் இந்தத் திட்டம் ஏற்றதாக இருக்கும்.
NPS வாத்சல்யா திட்டத்தின் தொகை திரும்பப் பெறுதல், வெளியேறுதல் மற்றும் இறப்பு: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இணையதளத்தின்படி: "கல்வி, குறிப்பிட்ட நோய் மற்றும் இயலாமைக்கு 3 வருட லாக்-இன் காலத்திற்குப் பிறகு முதலீட்டு தொகையில் 25% வரை திரும்பப் பெறலாம். அதிகபட்சம் மூன்று முறை பணம் பெற அனுமதிக்கப்படுகிறது. 18 வயதை எட்டியதும், தடையின்றி NPS டயர் - I-க்கு கணக்கு மாற்றப்படும். 18 வயதை அடைந்தவுடன் NPS வாத்சல்யா திட்டத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுகிறது.
உங்களுடைய மொத்த கார்ப்பஸ் 2.5 லட்சத்திற்கும் மேலிருந்தால் அவற்றில் 80 சதவீதம் "Annuity" பர்சேசுக்காகவும், 20 சதவீதத்தை மொத்த தொகையாகவும் பெறலாம். உங்களுடைய கார்பஸ் 2.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் மொத்தமாக அவற்றை திரும்பப் பெறலாம்.
விண்ணப்பிப்பதற்கான தகுதி: நாட்டிலுள்ள அனைத்து 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்காகவும் விண்ணப்பிக்கலாம்.
NPS வாத்சல்யா கணக்கை எங்கே திறப்பது?: வங்கிகள், இந்திய அஞ்சல் அலுவலகம் போன்றவற்றின் மூலம் NPS வாத்சல்யா கணக்கைத் திறக்கலாம். ஆன்லைன் தளத்தின் மூலமாகவும் NPS திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
NPS வாத்சல்யா திறக்க தேவையான ஆவணங்கள்:அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் பாதுகாவலரின் KYC.
மைனரின் பிறந்த தேதி சான்று, பாதுகாவலர் ன் NRI-யாக இருந்தால், மைனரின் என்ஆர்இ/என்ஆர்ஓ வங்கிக் கணக்கு மூலம் முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications