2024 முதல் 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அன்று NPS வாத்சல்யா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அப்போதே நிர்மலா சீதாராமன் NPS வாத்சல்யாவில் முதலீடு செய்வதற்கான ஆன்லைன் தளத்தையும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மைனர் குழந்தைகளுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) கொண்ட கார்டையும் நிர்மலா சீதாராமன் வழங்க உள்ளார்.
இங்கு நடக்கும் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 75 இடங்களில் ஒரே நேரத்தில் NPS வாத்சல்யா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NPS வாத்சல்யா, ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க முடியும் மற்றும் கூட்டு வட்டியின் நன்மையினால் நீண்ட கால செல்வத்தை உருவாக்க முடியும்.
குழந்தைகள் மேஜர் ஆனவுடன், குழந்தையின் கணக்கு வழக்கமான NPS கணக்காக மாற்றப்படும். பெற்றோர்கள் மாதந்தோறும் 500 ரூபாய் அல்லது வருடாந்திர பங்களிப்பாக 6,000 ரூபாயுடன் தொடங்கலாம். NPS வாத்சல்யா திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பெயரில் ஆண்டுதோறும் ரூ 1,000 முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இது அனைத்து பொருளாதார பின்னணியில் உள்ள குடும்பங்களுக்கும் முதலீடு செய்ய ஏற்றதாக இருக்கும்.
NPS வாத்சல்யா குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க புதிய முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பில் இந்தத் திட்டம் ஒரு முக்கிய படியாகும். குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஆரம்பத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டம் PFRDA அமைப்பின் கீழ் இயங்குகிறது.
எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு நிதி சுதந்திரம் வழங்குவதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான NPS திட்டத்தில் "Annuity" கட்டுப்பாடு இருக்காது என்றும் கூறப்படுகிறது.
NPS வாத்சல்யாவிற்கு யார் தகுதியானவர்?: இந்தியக் குடிமக்கள், NRI-கள் அல்லது OCI-கள் என அனைத்துப் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் மைனர் குழந்தைகளுக்காக NPS வாத்சல்யா கணக்கைத் தொடங்கத் தகுதியுடையவர்கள்.
NPS வாத்சல்யா திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் NPS வாத்சல்யா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications