டெல்லி : குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுள்ள என்பிஎஸ் வாத்சல்யா (NPS Vatsalya) திட்டத்திற்கு இனி வருமான வரி விலக்கு பெற முடியும் என்ற அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
2025 - 26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குழந்தைகளுக்கு என தொடங்கப்பட்ட என்பிஎஸ் வாத்சல்யா ஓய்வூதிய திட்டத்தில் பங்களிப்பு செய்பவர்கள் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சிசிடி(1 பி) (80CCD(1B))- இன் கீழ் வரி விலக்கு பெற முடியும் என அறிவித்தார்.

இந்தியாவில் தற்போது பழைய வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையின் கீழ் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்பவர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தாங்கள் செய்யும் பங்களிப்புகளை வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80சிசிடி(1 பி) இன் கீழ் குறிப்பிட்டு வரிசலுகை பெற முடியும். ஆனால் புதிய வரி நடைமுறையின் கீழ் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காது.
இதனிடையே நிதி நிலையை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாத்சல்யா திட்டத்தின் கீழ் பங்களிப்பு செய்பவர்கள் அதனை குறிப்பிட்டு வரிச்சலுகை பெற முடியும் என அறிவித்தார். எனவே வரி சேமிப்புக்காகவே பலரும் இந்த திட்டத்தின் கீழ் பங்களிப்பு செய்வார்கள் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் பங்களிப்பு செய்பவர்கள் ஒரு நிதியாண்டில் 50 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு பெறுவதற்கான தகுதியை பெறுகின்றனர்.
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை கடந்தாண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டிருக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக என்பிஎஸ் கணக்கினை தொடங்கி பணத்தை சேமித்து வரலாம். குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியதும் அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய தேசிய ஓய்வூதிய திட்டத்தின் அங்கமாகவே என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வாகம் செய்கிறது.
குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் செய்யப்படும் பணத்தை திரும்ப பெற முடியாது. அதன் பிறகு கல்வி, மருத்துவ காரணங்களுக்காக இதில் செய்த சேமிப்பில் இருந்து 25 சதவீதம் தொகையை பெறலாம். பின்னர் தேவைப்பட்டால் 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர் தேசிய ஓய்வூதிய கணக்கான என்பிஎஸ் திட்டத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. eNPS இணையதளம் வாயிலாக குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இந்த கணக்கை தொடங்க முடியும்.
Story written- Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications