அமெரிக்க டெக் நிறுவனங்களை இந்தியர்களை ஆள்வதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் இந்திய-அமெரிக்கர்கள் போட்டிப்போட்டு வரும் வேளையில், உலக வங்கியின் தலைவர் பதவியும் இந்திய-அமெரிக்கரான அஜய் பங்கா-வுக்கு வருகிறது.
உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்பதை உலக வங்கி புதன்கிழமை காலையில் உறுதிப்படுத்தியது. ஜூன் 2 ஆம் தேதி முதல் இவருடைய பணி காலம் துவங்குகிறது, இந்திய-அமெரிக்கரான அஜய் பங்கா-விற்குத் தற்போது 63 வயதாகிறது.

உலக வங்கியின் நிர்வாக குழு அஜய் பங்காவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்து காத்திருப்பதாக அறிவித்து, இவர் ஐந்தாண்டு காலத்திற்கு உலக வங்கியின் தலைவாராக நியமிக்க உலக வங்கியின உயர் மட்ட நிர்வாக குழு வாக்களித்த சிறிது நேரத்தில் உலக வங்கி அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
உலக நாடுகளில் பருவ நிலை மாற்றம் குறித்து தீவிரமாக பணியாற்றி வரும் வேளையில் இதன் போக்கை வேகப்படுத்தவும், சீர்திருத்தவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியமான நேரத்தில் அஜய் பங்கா நியமிக்கப்பட்டு, அவருக்கு முக்கியமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் கடினமான பொருளாதார வளர்ச்சி சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் உலக வங்கி நிர்வாக குழு புதிய தலைவரான அஜய் பங்காவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் அடுத்த தலைவருக்கான வேட்புமனு தாக்கலின் போது அமெரிக்கா தவிர வேறு எந்த நாடுகளும் இந்த மதிப்புமிக்க பதவிக்கு மாற்று வேட்பாளரை முன்மொழிய காரணத்தால் அஜய் பங்கா தான் இப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என மார்ச் மாத இறுதியிலேயே தெரியவந்த நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது.
உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் பதவி விலகுவதாக அறிவித்த நிலையில் இந்த முக்கியமான பதவியில் யாரை நியமிப்பது என்பதை தாண்டி, சர்வதேச பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் வேளையில் உலகி வங்கியின் புதிய தலைவர் மிகவும் திறமையானவராகவும், அனைத்து சந்தைகளிலும் அனுபவம் மிக்கவராகவும் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது.

இந்த நிலையில் இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா-வை உலக வங்கியை வழிநடத்த அமெரிக்க அரசு பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிப்ரவரி மாதம் தெரிவித்தார். அஜய் பங்கா இந்தியாவில் பிறந்தாலும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் மட்டும் அல்லாமல் பராக் ஓபாமா இவரை அதிபர் ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டார்.
பொதுவாக உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியரை நியமிப்பது தான் வழக்கம். அஜய் பங்கா நியமனம் உறுதியான நிலையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய இரண்டு சர்வதேச நிதி நிறுவனங்களில் தலைமை தாங்கும் முதல் இந்திய-அமெரிக்கர் மற்றும் சீக்கிய-அமெரிக்கர் என்ற பெருமையை அஜய் பங்கா பெறுவார்.
உலகளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவை அளிக்கும் மாபெரும் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தான் அஜய் பங்கா. மாஸ்டர்கார்டு நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறிய பின்பு உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் அட்லாண்டிக் என்ற ஈக்விட்டி முதலீட்டு நிறுவனத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
சொல்லப்போனால் பார்சூன் 500 நிறுவன பட்டியலில் இன்று பல நிறுவனங்களில் இந்தியர்கள் சிஇஓ-வாக இருந்தாலும், அனைத்திற்கும் முன்னோடி அஜய் பங்கா தான்.


Click it and Unblock the Notifications