இன்று பணியில் சேர்ந்த 2K கிட்ஸ் முதல் 10 வருடத்திற்கு முன்பு பணியில் சேர்ந்த 90s கிட்ஸ் வரையில் அனைவருக்கும் அமெரிக்கா வாழ்க்கை மீது மோகம் அதிகம். இதிலும் குறிப்பாக அமெரிக்கா சென்றுவிட்டால் அந்த நாட்டிலேயே குடியுரிமை பெற வேண்டும் என்ற எண்ணம் 99 சதவீதம் பேருக்கு வந்துவிடும்.
ஆனால் அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்குவதில் இந்தியர்களை பயமுறுத்தும் முக்கியமான விஷயம் இதற்கான காத்திருப்பு காலம் தான். அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற போதுமான தகுதிகளை பூர்த்தி செய்து விண்ணப்பம் சமர்பித்தால் காத்திருப்பு காலம் 10 -15 வருடமாக உள்ளது.

இந்த மோசமாக காத்திருப்பு காலத்திற்கு என்ன காரணம் என்பதை அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் விளக்கியுள்ளது. இந்தியர்களுக்கு மட்டும் தான் இந்த காத்திருப்பு காலமா என்றால் இல்லை ஏறகுறைய அனைத்து நாடுகளுக்கும் இந்த நிலை தான். ஆனால் இந்தியாவில் இருந்து சென்றோர் அதிகப்படியான கிரீன் கார்டு விண்ணப்பம் செய்துள்ளதால் கூடுதல் காத்திருப்பு காலம் உருவாக்கியுள்ளது.
இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிரீன் கார்டுகளுக்காக நீண்ட காத்திருப்புக்கு முக்கியமான காரணம், அமெரிக்க அரசு நாட்டின் அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறையின் கீழ் கிரீன் கார்டு வழங்குகிறது.
இந்த முறையை மாற்றவோ அல்லது மறுசீரமைப்பு செய்வோ அமெரிக்க காங்கிரஸ் அதாவது அந்நாட்டு நாடாமன்றத்தில் ஏகோபித்த ஒப்புதல் மூலம் மட்டுமே சாத்தியம் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிரந்தர குடியுரிமை அட்டை என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் கிரீன் கார்டு என்பது அமெரிக்காவிற்கு குடியேறியவர்களுக்கு நிரந்தரமாக அந்நாட்டில் வசிப்பதற்கான சலுகையைப் பெற்றுள்ளார் என்பதற்கான சான்று. கிரீன் கார்டு பெறுவதன் மூலம் அமெரிக்க குடிமக்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள் பெற முடியும்.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) பிரிவின் இயக்குநரின் மூத்த ஆலோசகர் டக்ளஸ் ரேண்ட் கிரீன் கார்டு காத்திருப்பு காலம் குறித்து பேசுகையில் அமெரிக்க அரசு வருடத்திற்கு குடும்பம் முன்னுரிமை அடிப்படையில் உலக நாடுகள் அனைத்திற்கும் சேர்த்து மொத்தம் 2,26,000 கிரீன் கார்டுகள் வழங்கப்படுகிறது. இதேபோல் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுக்கான ஆண்டு வரம்பு 1,40,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதை தாண்டி ஒரு ஆண்டுக்கு ஒரு நாட்டுக்கு மொத்த கிரீன் கார்டு எண்ணிக்கையில் அதிகப்படியாக 7 சதவீதம் மட்டுமே வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதாவது ஒரு வருடத்திற்கு குடும்ப அடிப்படை மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையில் 25,620 கிரீன் கார்டு மட்டுமே இந்தியாவுக்கு வழங்கப்படும். இந்த விதி உலக நாடுகளுக்கும் பொறுந்தும் என டக்ளஸ் ரேண்ட் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான கிரீன் கார்டு விண்ணப்பம், 7 சதவீத வருடாந்திர கட்டுப்பாடு ஆகியவை தான் இந்தியர்களுக்கான கிரீன் கார்டு விண்ணப்பங்களின் காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications