அலுத்துப்போன வெளிநாட்டு வாழ்க்கை..! ரிட்டையர்டு காலத்தில் தாயகம் திரும்ப ஏங்கும் NRI-கள்..!

ஐஐடி, ஐஎம்எம்களில் படித்துவிட்டு அதிக சம்பளத்துக்காகவும், வசதியான வாழ்க்கைத் தரத்துக்காகவும் இதுவரை பல கோடி மக்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகப்படியான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

இதில் இப்போது ரிட்டயர்மென்ட் வயதைப் பெரும்பாலானவர்கள் நெருங்கிவிட்டனர். என்னதான் அதிக சம்பளத்தை வெளிநாட்டில் வாங்கினாலும் அந்தப் பணத்தின் மதிப்பு அந்த நாட்டில் பெரிதாக இருக்காது. எனவே இதுவரை சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு வந்து தங்களது தாய் நாடான இந்தியாவில் வந்து செட்டில் ஆகி மீதக்காலத்தை நிம்மதியாகக் கழிக்கும் மனப்பான்மைக்கு வந்துவிட்டனர்.

அலுத்துப்போன வெளிநாட்டு வாழ்க்கை..! ரிட்டையர்டு காலத்தில் தாயகம் திரும்ப ஏங்கும் NRI-கள்..!

குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப ஆர்வத்துடன் உள்ளதாக இதுபற்றி மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

என்ஆர்ஐகளுக்கு இந்திய அரசு பல நிதிச் சலுகைகளை அளிக்கின்றது. அவர்கள் அந்நியச் செலாவணியில் சம்பாதிக்கவும், இந்தியாவில் முதலீடு செய்து சேமிக்கவும் தாராளமாக அனுமதிக்கிறது. ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறைந்தது 60 சதவீத என்ஆர்ஐகள் இதனால் இந்தியா வருவதற்கு தயாராகி வருகின்றனர்.

இதில் 30 - 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த ரிட்டயர்மென்ட் யோசனை இல்லை என்றாலும், அதற்கு மேற்பட்டவர்கள் தயாராகவே உள்ளனர்.

இதுபற்றி SBNRI என்ற நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூரில் உள்ள என்ஆர்ஐகளில் 80 சதவீதமும், இங்கிலாந்தில் 70 சதவீதமும், அமெரிக்காவில் 75 சதவீதமும், கனடாவில் 63 சதவீதமும் தங்கள் ஓய்வூதியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்குத் திரும்புவதை விரும்புகின்றனர்.

சிறப்பான உற்பத்தித் திறன்கள், நிதிச் சேவைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இந்தியா வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்டார்ட்அப் மையமாக உள்ளது. அதன் பொருளாதாரத்தை மேலும் வலுவாக்க தலைசிறந்த உத்திகளை வகுத்து வருகிறது. இதன் மூலம் 72 சதவீத என்ஆர்ஐகள், இந்தியாவில் ஓய்வுக்காலத்தை சிறப்பாக கழிக்கலாம் என நம்புகின்றனர். முதலீடுகளுக்கும் நல்ல வாய்ப்புள்ளதாகவும் கருதுகின்றனர்.

இளம்வயதில் பணம் சேர்ப்பது எதிர்காலத்தில் உதவும் என்பதால் ஐடி நிபுணர்கள் இப்போதைக்கு வெளிநாடுகளுக்குப் படையெடுத்து வந்தாலும் அவர்களது ஓய்வுகாலம் நெருங்கும்போதும் இதேபோன்ற சூழ்நிலை நிச்சயம் உருவாகும்.

ஒருவேளை இந்தியா அதற்குள் சாதகமான வேலை வாய்ப்புகளையும், சம்பாதிக்கும் வழிமுறைகளையும் இளைஞர்களுக்கு வரும்காலத்தில் அமைத்துக் கொடுக்குமானால் அந்தச் சூழ்நிலையும் ஏற்படாது. இனி பிரெய்ன் டிரைன் இந்தியாவில் உருவாகாது என நம்பலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+