இந்தியாவில் பல வர்த்தக துறையின் போக்கை மாற்றும் என்ஆர்ஐ தற்போது மருத்துவ துறையையும், இன்சூரன்ஸ் துறையையும் தலைகீழாக புரட்டிப்போட்டு வருகின்றனர். முன்பெல்லாம் அமெரிக்கா, பிரிட்டன், துபாய் போன்ற நாடுகளில் இருக்கும் இந்தியர்கள், சொந்த நாட்டுக்கு வரும் போது மருத்து சிகிச்சை செய்வது ஒரு வழக்கமாக இருந்தது.
ஆனால் இப்போது நிலைமை மாறி சிகிச்சைக்காகவே இந்தியாவுக்கு வரும் நிலை உருவாகியுள்ளது. ஆம், வளைகுடா நாடுகள் முதல் அமெரிக்கா வரை வசிக்கும் என்ஆர்ஐ-கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு இந்தியாவை அதிகம் விரும்புவது மட்டும் அல்லாமல் இதற்கான ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்ய தயாராகி வருகின்றனர். இதன் மூலம் மருத்துவமனையிலும், இன்சூரன்ஸ் துறையிலும் தற்போது NRI-கள் முக்கிய வாடிக்கையாளராக மாறியுள்ளனர்.

Policybazaar நிறுவனத்தின் சமீபத்திய தரவுகளின்படி, என்ஆர்ஐக்களால் வாங்கப்படும் மருத்துவ காப்பீட்டு கொள்கைகள் வருடாந்திர அடிப்படையில் 126 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்ப போல் தொலைவில் இருக்கும் மக்களுக்கு சேவை அளிப்பதற்காக தற்போது மருத்துவமனைகள் AI அடிப்படையிலான டெலி-மெடிக்கல் பரிசோதனைகள், டிஜிட்டல் பதிவு முறை ஆகியவற்றையும் கொண்டு வந்துள்ளது.
எதற்காக NRI-கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்..?
இந்தியாவில் சுகாதார காப்பீடு விலை மிகக் குறைவு, வளைகுடா நாடுகளில் ஒரு காப்பீடு 2,000 முதல் 3,000 டாலர் வரை செலவாகும் நிலையில், இந்தியாவில் 120 முதல் 300 டாலர் மட்டுமே. இதுவே அமெரிக்கா, லண்டனில் இதன் அளவு இன்னும் அதிகம். மேலும் அவசர சிகிச்சை பெற வேண்டும் என்றால் மொத்த சம்பளத்தையும் எழுதிக்கொடுக்க வேண்டும். இதனால், என்ஆர்ஐக்கள் தங்கள் குடும்பத்தினருக்கும், குறிப்பாக வயதான பெற்றோர்களுக்கும் இந்திய காப்பீட்டை முழுமையான ஹெல்த்கேர் தீர்வாகப் பார்க்கின்றனர்.
NRI-கள் இந்தியாவுக்கு வர என்ன காரணம்..?
இந்தியாவில் செலவுகள் மட்டும் குறைவு கிடையாது, மருத்துவ சிகிச்சையின் தரமும் அதிகம். தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் வந்துள்ளது. சிகிச்சையின் தரத்திலும், தொழில்நுட்ப பயன்பாட்டிலும் பெரும் முன்னேற்றம் காணப்படுகிறது. இதனால் வெளிநாட்டில் கிடைக்கும் மருத்துவ சேவைக்கு இணையாக இந்தியாவிலும் கிடைக்கும் காரணத்தால் என்ஆர்ஐ-கள் முன்பைவிடவும் அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் மருத்துவ காப்பீடு பெற்று தங்களுக்கும், தங்களுடைய குடும்பத்திற்கும் மருத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காப்பீட்டு தொகை
என்ஆர்ஐ-கள் எடுக்கும் மருத்துவ காப்பீட்டின் மதிப்பு சராசரியாக 25 லட்ச ரூபாய்க்கு மேல் கவரேஜ் கொண்டதாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகயில் குடும்ப காப்பீட்டு திட்டங்கள் 20 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக உயர்ந்துள்ளன. பெற்றோர்களுக்கான காப்பீடுகள் 32 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளன என பாலிசிபஜார் தெரிவித்துள்ளது
எந்த நாட்டு என்ஆர்ஐ-கள் அதிகம்..?!
இந்த ஆண்டு பதவு செய்யப்பட்ட என்ஆர்ஐ மெடிக்கல் இன்சூரன்ஸ்-ல் வளைகுடா பகுதியை (UAE, சவுதி அரேபியா, குவைத்) சேர்ந்த என்ஆர்ஐ மக்களின் பங்கீடு 50 சதவீதமாக உள்ளது, ஐரோப்பாவில் 25 சதவீத பங்கீடு, அமெரிக்கா மற்றும் கனடா 17 சதவீதம் பங்கீடு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 சதவீதம் என்ஆர்ஐகள் மருத்துவ காப்பீட்டை பெற்றுள்ளனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications