துபாய், அபுதாபி, ஷார்ஜா-வில் இருக்கும் இந்தியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!!

மத்திய அரசின் கீழ் இயங்கும் NPCI அமைப்பின், சர்வதேச அமைப்பான NPCI இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் லிமிடெட் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதும் டிஜிட்டல் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (Network International) நிறுவனத்துடன் இணைந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் யூபிஐ பணப்பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள நெட்வொர்க் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் பாயிண்ட்-ஆஃப்-சேல் (POS) டெர்மினல்கள் மூலம் கியூஆர் குறியீடு வாயிலாக யூபிஐ பணப்பரிவர்த்தனை சேவை வழங்கப்படும்.

 துபாய், அபுதாபி, ஷார்ஜா-வில் இருக்கும் இந்தியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!!

இதன் மூலம், இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில், இந்தியாவில் செய்வது போலவே விரைவான மற்றும் பாதுகாப்பான முறையில் பணத்தை அவர்களது யூபிஐ செயலி வாயிலாகச் செலுத்த முடியும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராச அல் கைமா மற்றும் புஜைரா ஆகிய எமிரேட்ஸ்-ன் கூட்டமைப்பு தான். இந்த 7 நாடுகளில் இருப்பவர்கள் யூபிஐ சேவையைப் பயன்படுத்த முடியும்.

 துபாய், அபுதாபி, ஷார்ஜா-வில் இருக்கும் இந்தியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!!

இந்திய அரசு உருவாக்கிய யுபிஐ சேவையை ஏற்றுக்கொள்ளும் உலக நாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று NPCI வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விரிவாக்கம் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள ரீடைல் கடைகள், உணவகங்கள், சுற்றுலாத் தளங்கள் போன்ற இடங்களில் இந்திய சுற்றுலா பயணிகளும், என்ஆர்ஐ-களும் யூபிஐ மூலம் பணம் செலுத்த முடியும்.

கடந்த 2024 ஆம் ஆண்டில், வளைகுடா (GCC) நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 9.8 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், UAE- க்கு மட்டும் 5.29 மில்லியன் இந்தியர்கள் சுற்றுலா செல்வார்கள் என NPCI தெரிவித்துள்ளது. இதை அடிப்படையாக வைத்தே தற்போது UPI சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

 துபாய், அபுதாபி, ஷார்ஜா-வில் இருக்கும் இந்தியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை வேகமாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், இந்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் NPCI இண்டர்நேஷனல் நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் யூபிஐ சேவையைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது, நேபாளம், இலங்கை, மொரிஷியஸ், UAE , சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் யூபிஐ பணப்பரிவர்த்தனை S ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+