உலகின் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இங்குள்ள தங்களது குடும்பத்தினருக்கு அனுப்புகின்றனர். உலகிலேயே தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளார்கள்.
உலக வங்கியின் தரவுகளின்படி, 2023ம் ஆண்டில் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் இந்தியாவுக்கு 12,500 கோடி டாலரை அனுப்பியுள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தப்படியாக மெக்சிகோ (6,700 கோடி டாலர்), சீனா (5,000 கோடி டாலர்),பிலிப்பைன்ஸ் (4,000 கோடி டாலர்) மற்றும் எகிப்து (2,400 கோடி டாலர்) உள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கு 4 வழிகளில் பணத்தை அனுப்பலாம். என்.ஆர்.இ. கணக்கு, பின்டெக் ஆப்ஸ், வெளிநாட்டு வங்கி கணக்கு மற்றும் வெஸ்டர்ன் யூனியன் ஆகிய பிரபலமான 4 வழிகளில் ஒருவர் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணத்தை அனுப்பலாம். உங்களுக்காக அவை சுருக்கமாக இதோ.
என்.ஆர்.இ. கணக்கு: இந்திய வங்கிகளில் எந்தவொரு வெளிநாட்டு வாழ் இந்தியரும், இந்திய நாணயமாக மாற்றப்படும் வெளிநாட்டு நாணயத்தை டெபாசிட் செய்ய வெளிநாட்டில் வசிக்காதவர் (என்.ஆர்.இ.) கணக்கை தொடங்கலாம்.
அது ஒரு சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, தொடர் கணக்கு மற்றும் பிக்சட் டெபாசிட் கணக்கில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். இந்திய வங்கியில் இந்திய பணமாக மாற்றப்பட்டதும், உள்நாட்டு பணத்தில் சக இந்திய குடிமகனுக்கு மாற்றப்படும். இந்த கணக்கில் இருக்கும் அசல் மற்றும் வட்டிக்கு எந்த வட்டியும் விதிக்கப்படாது. இந்த கணக்கை தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறக்கலாம்.
பின்டெக் ஆப்ஸ்: ஏராளமான நிதி தொழில்நுட்ப செயலிகள் (பின்டெக் ஆப்ஸ்) எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத்தை தடையின்றி செயல்படுத்த உள்ளன. Revolut மற்றும் MoneyGram ஆகியவை பிரபலமான பின்டெக் ஆப்ஸில் குறிப்பிடத்தக்கவை. இந்த ஆப்ஸ்கள் அனுப்புநரிடமிருந்து சிறு பரிமாற்ற கட்டணததை வசூலிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
வெளிநாட்டு வங்கி கணக்கு: உங்களிடம் வெளிநாட்டு வங்கிக் கணக்கு இருந்தால், எந்த தொந்தரவும் இன்றி நெட்பேங்கிங் மூலம் பயனாளிக்கு பணத்தை அனுப்பலாம். மிகவும் வசதியானது என்றாலும், சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்ப கொஞ்சம் செலவாகும் என்பதால் இது மிகவும் விலையுயர்ந்த வழியாகும்.
வெஸ்டர்ன் யூனியன்: இது போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் ஒருவர் இந்தியாவுக்கு பணத்தை மாற்றலாம். ஆன்லைனில் பணத்தை மாற்ற இது ஒரு வசதியான வழியாகும்.. இந்த தளங்களுக்கு சென்று இந்தியா என்பதை தேர்வு செய்து, பரிமாற்றத் தொகையை உள்ளிட்டு, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த வேண்டும். பின்பு பணம் பெறுபவரின் விவரங்களை குறிப்பிட வேண்டும். உலகெங்கிலும் உளள் வெஸ்டர்ன் யூனியன் அலுவலகம் ஒன்றில் பெறுநர் பணத்தை பெறலாம்.


Click it and Unblock the Notifications