வெளிநாட்டில் செட்டிலாக வேண்டும் என்பது பலருக்கும் பெரும் கனவாக இருந்தாலும், சிலருக்கு மட்டுமே அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும். இதனாலேயே இன்றைய தலைமுறையினர் கல்லூரி படிப்பை வெளிநாட்டில் படிப்பது அதிகரித்துள்ளது.
வெளிநாட்டில் படித்தால் திறமையானவர்களுக்கு உடனே வேலை கிடைப்பது மட்டும் அல்லாமல் அந்நாட்டு மாணவர்களுக்கு இணையாக கிடைக்கும் சம்பளத்தில் வேலை கிடைக்கும், இதேபோல் விசா பிரச்சனையும் இருக்காது.

வெறும் இந்தியாவைச் சேர்ந்த கருண் விஜ், கனடாவில் படிக்கச் சென்று, படித்து, பட்டம் பெற்று, அங்கேயே வேலை பார்ப்பது மட்டும் அல்லாமல், வெறும் 33 வயதில் தற்போது நான்கு வீடுகளை வாங்கிக் கைநிறைய வாடகை மூலம் சம்பாதித்து வருகிறார். வீட்டை வாடகைக்கு விடுவது வாயிலாக மாதம் ஒன்பது லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். ஆம், நீங்கள் படித்தது சரிதான்.
கருண் விஜ் கனடாவுக்குப் பிடிக்க வந்த போதே சொந்தமாக வீட்டை வாங்க வேண்டும் என விரும்பினார், மேலும் கல்லூரியில் பட்டம் பெற்ற கையோடு தனது கனவை நனவாக்கினார். 33 வயதான கருண் விஜ் தற்போது கனடாவில் நான்கு வீடுகளைக் கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்குக் கொடுத்து மாதம் ஒன்பது லட்சம் சம்பாதிக்கிறார்.
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஹாமில்டனில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பைப் படிக்கும் போது, தனது கல்லூரிக்கு அருகிலுள்ள வீட்டை மொத்தமாக வாடகைக்கு விடாமல் ஒரு அறைக்குத் தனியாக ஒருவருக்கு வாடகைக்குக் கொடுத்து வசூலிப்பதை கருண் விஜ் பார்த்து வியந்தார்.
இதனைத் தொடர்ந்து பணத்தைச் சேமிக்கச் சில ஆண்டுகள் தேவைப்பட்டாலும், அவர் 2016 இல் பட்டம் பெற்ற நேரத்தில் மெக்மாஸ்டர் வளாகத்திற்கு அருகில் ஒரு வீட்டை வாங்கினார். ஏற்கனவே திட்டமிட்டது போல் தனது வீட்டை குடும்பங்களுக்கு வாடகைக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, அதிக லாபம் ஈட்ட திட்டமிட்டு கல்லூரி மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்தார்.
கருண் விஜ்-க்கு 26 வயதாக இருந்தபோது, ஹாமில்டன் வீட்டை 323,904 டாலர் அதாவது ரூ.2.7 கோடி மதிப்பிலான வீட்டை 64,781 டாலர் அதாவது ரூ.54 லட்சம் முன்பணமாகக் கொடுத்து வாங்கினார். அதை ஏழு கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்குக் கொடுத்து தனது பயணத்தைத் துவங்கியுள்ளார்.
வீட்டை வாங்கிவிட்டோம் என முழுநேரமாக இதையே தொழிலாகச் செய்யவில்லை. கருண் விஜ் கல்லூரி முடிந்ததும் அப்ளிகேஷன் இன்ஜினியராகப் பணியாற்றினார், பின்னர் ஒரு உலகளாவிய ஆட்டோமேஷன் நிறுவனத்தில் அக்கவுண்ட் மேனேஜராகவும் பணியாற்றத் தொடங்கினார்.
இந்தப் பயணத்தில் சம்பளம் உயர உயர கருண் விஜ் அதிக வாடகை கிடைக்கும் தெற்கு ஒன்டாரியோவில் பல வீடுகளை வாங்கினார். இப்போது கருண் விஜ் தனது மனைவி மற்றும் மகளுடன் சிகாகோவில் வசிக்கிறார்.
தற்போது வீட்டு வாடகை வாயிலாக மட்டுமே வருடம் 183,000 டாலர் அளவுக்குச் சம்பாதிக்கிறார், அதாவது மாதம் 9 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுகிறார். தற்போது கனடாவில் 2.3 மில்லியன் டாலர் மதிப்பிலான நான்கு வீடுகளை வைத்துள்ளார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications