டெல்லி: 2025 - 26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு பணம் அனுப்பும்போது வசூல் செய்யப்பட்டு வந்த டிசிஎஸ் எனப்படும் மூலத்தில் பிடிக்கப்படும் வரியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் Liberalized Remittance Scheme எனப்படும் பணப்பரிமாற்ற திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பணம் அனுப்பும் போது அதில் டிசிஎஸ் எனப்படும் மூலத்திலிருந்து வரி பிடித்தம் செய்யப்படும். 7 லட்சம் ரூபாய் வரையிலான பணத்திற்கு டிசிஎஸ் பிடித்தம் கிடையாது , 7 லட்சம் ரூபாய்க்கு மேல் சென்றால் டிசிஎஸ் பிடிக்கப்படும். இந்த வரம்பை நிர்மலா சீதாராமன் மாற்றி இருக்கிறார்.

இதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி தாங்கள் அனுப்பும் பணத்தில் 10 லட்சம் ரூபாய் வரையிலான பணத்திற்கு டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. மக்களவையில் சனிக்கிழமை அன்று தன்னுடைய எட்டாவது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் கல்வி நோக்கங்களுக்காக அனுப்பப்படும் பணத்திற்கு இனி டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படாது என கூறியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்ட கல்வி கடனை திரும்ப செலுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு இனி டிசிஎஸ் பிடிக்கப்படாது என அவர் அறிவித்தார். மேலும் எல்ஆர்எஸ் திட்டத்தின் கீழ் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்திற்கான டிசிஎஸ் உச்ச வரம்பு 10 லட்சமாக உயர்த்த முன்மொழிகிறேன் என்றார்.
டிசிஎஸ் பிடித்தம் தொடர்பான வரம்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. காலப்போக்கில் இந்த டிசிஎஸ் பிடித்தங்கள் சிக்கலானதாகவும் சுமையானதாகவும் மாறி இருப்பதாக கூறக்கூடிய வெளிநாடு வாழ் இந்தியர்கள், அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் பிடித்தங்கள் நடைமுறையை எளிமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தற்போதைக்கு அரசு இந்த டிசிஎஸ் பிடித்ததற்கான வரம்பினை உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது இதனை இன்னும் கூட உயர்த்தலாம் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. குறிப்பாக கல்வி மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காக வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் இந்தியர்கள் இதன் மூலம் பெரிய அளவிலான பலன்களை பெறுவார்கள் என தெரிவிக்கின்றனர்.
இதுவரை 7 லட்சம் ரூபாய்க்கு மேல் இந்தியாவிற்கு பணம் அனுப்பினால் 20% என டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த வரம்பி 10 லட்சம் ரூபாய் என உயர்த்தி இருப்பது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வரி சேமிக்கும் வாய்ப்பை தந்துள்ளது.


Click it and Unblock the Notifications