இந்திய அரசின் டாலர் வருமானத்திற்கு முக்கியமான வழித்தடமாக இருப்பது வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் அனுப்பும் பணம். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு சந்தை, விலைவாசி போன்ற பல காரணிகள் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் பணம் அனுப்பும் விகிதம் பெரிய அளவில் மாற்றம் அடைகிறது.
அந்த வகையில் NRI-கள் கடந்த நிதியாண்டில் 135.46 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். இது வரலாற்றில் மிக உயர்ந்த அளவாகும். இதேவேளையில் கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்பும் எண்ணம் அதிகரித்துள்ளதும் வெளிப்படையாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட சமீபத்திய பணப்பரிமாற்ற தரவுகளின்படி, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் 'private transfers' எனப்படும் மொத்த டாலர் உள்வரவு, முந்தைய ஆண்டை விட 14% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியா, புலம்பெயர்ந்தோரின் பணப்பரிமாற்றத்தில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த 135.46 பில்லியன் டாலர் தொகை என்பது கடந்த எட்டு ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. 2016-17இல் என்ஆர்ஐ-கள் அனுப்பிய பணம் என்பது 61 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது, இப்போது 135.46 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதேவேளையில் உலக வங்கியின் தரவுகளின்படி, இந்தியா உலக அளவில் புலம்பெயர்ந்தோர் பணப்பரிமாற்றத்தில் முதலிடத்தில் உள்ளது. 2024ஆம் ஆண்டில், மெக்ஸிகோ 68 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும், சீனா 48 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
பொதுவாக கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றம் NRI-களின் ரெமிட்டன்ஸ் தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்ட போதும் NRI-களின் ரெமிட்டன்ஸ் தொகை 10 சதவீதம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் திறன் பெற்ற ஊழியர்கள் அதிகளவில் வெளிநாட்டுக்கு செல்வது தான். அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு புலம்பெயரும் மக்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. RBI தரவுகளின்படி, இந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் ரெமிட்டன்ஸ் தொகை மொத்த பணப்பரிமாற்றத்தில் 45% பங்கு வகிக்கின்றன.
மறுபுறம், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நிதி பங்கீடு குறைந்து வருகிறது. பொதுவாக, கச்சா எண்ணெய் விலைகள் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பணப்பரிமாற்றங்களை பாதிக்கின்றன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications