2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய அரசாங்கம் முடிவு செய்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மே 19 ஆம் தேதி நாட்டு மக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தோ அல்லது பிற ரூபாய் நோட்டுகளாகவோ மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது.
மே 23 ஆம் தேதி முதல் மக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டிகளை மாற்றி வரும் வேளையில் ஆர்பிஐ-யின் இந்த அறிவிப்பு வளைகுடா நாடுகளில் உள்ள பல இந்தியர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை அளிக்க துவங்கியுள்ளது.

இந்திய நாணய புழக்கத்தில் மொத்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் வெறும் 10.8 சதவீதத்துடன் 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டு பணப்புழக்கத்தில் உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி இருக்காது என கணிக்கப்பட்டது போலவே, மே 23 ஆம் தேதி அதாவது 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முதல் நாளில் வங்கிகளில் சில குழப்பங்கள் இருந்தாலும் மக்கள் கூட்டம் இல்லை.
ஆனால் இதேவேளையில் வெளிநாட்டில் இருக்கும் என்ஆர்ஐ-களும், 2000 ரூபாய் வைத்திருக்கும் வெளிநாட்டினரும் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்திய மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
ஆர்பிஐ 2000 ரூபாய் திரும்ப பெறும் அறிவிப்பை வெளியிட்ட உடனே வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்திய மக்கள் தங்களிடம் வைத்திருந்த 2000 ரூபாய் நோட்டுகளை உள்நாட்டு நாணயமாக மாற்ற அருகில் இருக்கும் நாணய பரிமாற்றங்கள் அலுவலகத்திற்கு சென்றால், 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்துள்ளார்கள்.
சவுதி அரேபியா, துபாய், கத்தார், அபுதாபி போன்ற நாடுகளில் இருக்கும் நாணய பரிமாற்ற நிறுவனங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என முடிவு செய்துள்ளன. இதை மாற்றுவதற்கான வாய்ப்பை வெளிநாட்டு வங்கிகள் ஏற்படுத்தி கொடுக்காத நிலையில் நாணய பரிமாற்ற நிறுவனங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கிறது.
வளைகுடா நாடுகளில் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நேபாளம் என அனைத்து நாடுகளிலும் இதே நிலை தான். இதனால் உலக நாடுகளில் இருக்கும் என்ஆர்ஐ-கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்தியாவுக்கு வர வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இல்லையெனில் இந்தியாவுக்கு செல்லும் நபரிடம் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இவ்விரு வாய்ப்புகளும் இல்லாதவர்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆர்பிஐ செப்டம்பர் 30க்கு பின்பு 2000 ரூபாய் நோட்டுக்கு என்ன நடக்கும் என அறிவிக்காமல் உள்ளது என்ஆர்ஐ-களுக்கு கூடுதல் பிரச்சனையாகும்.
பூட்டான் நாட்டில் பெரிய ஹோட்டல் முதல் கடைகள் வரையில் இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருநாட்டு எல்லை பகுதியில் இந்திய ரூபாயில் தான் அதிகப்படியான வர்த்தகம் நடக்கிறது. இதேபோல தான் நேபாளத்திலும் இந்திய ரூபாய் பொரும்பாலான இடத்தில் பெறப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்பிஐ அறிவிப்புக்கு பின்பு, பூட்டான் நாட்டில் இந்திய வங்கிகள் இல்லை என்பதாலும், பூட்டான் மத்திய வங்கியும் 2000 ரூபாய்க்கு இணையாக பூட்டான் நாணயத்தை அளிக்கும் வசதியை ஏற்பாடு செய்யாத காரணத்தாலும், பூட்டான் மக்களிடம் இருக்கும் 2000 ரூபாய் தற்போது செல்லாகாசாக மாறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications