சென்னை: இந்திய ரியல் எஸ்டேட் துறை, கடந்த 10 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் இந்த வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பெரும் பங்கு வகித்துள்ளனர். அதன்படி DLF கட்டுமான நிறுவனம் NRI முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ. 3,400 கோடிக்கு மேல் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பெரிய கட்டுமான நிறுவனமான DLF 2023-2024ஆம் நிதியாண்டில் அதன் ஒட்டுமொத்த விற்பனையில் 20% விற்பனையை வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் (NRI) செய்துள்ளது. NRI முதலீட்டாளர்களிடமிருந்து DLF நிறுவனம் சுமார் ரூ.3,400 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது எனக் கூறப்படுகிறது.

இதன் படி கட்டுமான நிறுவனங்களின் ஒட்டு மொத்த விற்பனையின் அடிப்படையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நான்காவது இடத்தில் உள்ளனர். இந்த விற்பனையானது பேண்டமிக் காலத்திற்குப் பிறகு இன்னும் சற்று அதிகரித்து உள்ளது. தொடர்ந்து வரும் விலை உயர்வு மற்றும் அதிகரித்த தேவை காரணமாக இந்த விற்பனை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்களின் கூற்றுப்படி, சிங்கப்பூர், துபாய், ஆஸ்திரேலியா மற்றும் சவுதி அரேபியா அவர்களுக்கு மிகப்பெரிய சந்தைகளாக இருக்கின்றன. மேலும் அங்கு முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதன் பயன்பாட்டை எடுத்துக் கூறும் வகையில் குழுக்களை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்ந்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர்.
2018 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில் மட்டும் 8.6 சதவீத வீழ்ச்சி அடைந்தது. அதன் பிறகு 2019 ஆம் ஆண்டில் 2 சதவீதமும், 2020 ஆம் ஆண்டில் 2 சதவீதமும், 2021 ஆம் ஆண்டில் 1.5 சதவீதமும் வீழ்ச்சி அடைந்தது. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ரூ. 74.40ல்லிருந்து ரூ. 81.88 ஆக மாறியது. NRI முதலீட்டாளர்கள் அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
DLF நிறுவனத்தின் கூற்றுப்படி, 2019-2020ஆம் நிதியாண்டில், இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் மொத்த முதலீடுகளில் சுமார் 10% NRIகளின் பங்காக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை இன்னும் சற்று மேல்நோக்கியே சென்றது. வரும் நிதியாண்டிலும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக துபாய், அபுதாபி, லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலீடு செய்ய எங்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் NRIகள் முக்கியப் பங்குவகிக்கின்றனர் என்று TARC Ltd இன் MD மற்றும் CEO அமர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications