கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா போன்ற வல்லரசு நாடுகளில் இருந்து இந்தியர்கள் தானாக முன்வந்து தாய் நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். என்ஆர்ஐ-களின் இந்த திடீர் முடிவுக்கு டிரம்ப்-ன் கட்டுப்பாடுகளோ, விசா பிரச்சனையோ, வேலைவாய்ப்பு இழப்பதாலோ இந்தியாவுக்கு வரவில்லை.
மாறாக, என்ஆர்ஐ-கள் அமெரிக்காவில் பெற்ற வெற்றி, பணம், அனுபவம் ஆகியவற்றை இந்தியாவில் பயன்படுத்தவு முடிவு செய்துள்ளதால் ஏற்படும் முக்கியமான திருப்பம் என முன்னணி தொழில்நுட்ப வல்லுனரும், இன்ஸ்டா பிரபலமான திலீப் கார்பூர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பெரும்பாலானோர் மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களை தேர்ந்தெடுக்கவில்லை. அனைவரும் ஒரே இடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர், அது தான் பெங்களூர். ஆனால் ஏன்.
சமுக வலைத்தளத்தில் "Back to India" என்ற கம்யூனிட்டி-யில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட NRIகள் இந்தியாவுக்கு திரும்புவதற்கு திட்டமிடுகின்றனர். அவர்களின் பதிவுகளை பார்க்கும்போது பெங்களூரு மீதான ஆர்வம் மிக அதிகமாக உள்ளது.
பெங்களூரு ஏன் பெஸ்ட் சாய்ஸ்?
முதலில், இங்கு க்ளைமேட் ஆண்டு முழுவதும் இதமாக உள்ளது. கடற்கரை, மலைப்பகுதிகள், விமான நிலையங்கள் ஆகிய அனைத்தும் ஒரு 2 மணி நேர பயணத்தில் சென்றடையும் தூரத்தில் உள்ளன. மிக முக்கியமாக, உலகின் முன்னணி நிறுவனங்களின் 870க்கும் மேற்பட்ட குளோபல் கேபபிலிட்டி சென்டர்கள் (GCCs) இங்கு அதிகம் உள்ளன.
கோல்ட்மன் சாக்ஸ், கூகுள், ஜே.பி.மார்கன் போன்றவை மூத்த பதவிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கின்றன. இதனால் NRIகள் அமெரிக்காவில் பெற்ற சம்பளத்திற்கு கிட்டத்தட்ட இணையான அல்லது சிறிய அளவில் குறைந்த வருமானத்தை பெறும் வாய்ப்பு தற்போது எளிதாக கிடைக்கிறது.
முன்பெல்லாம் இந்தியர்கள் எங்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை மட்டுமே பார்த்தனர். ஆனால் இப்போது "பணம் எங்கு நன்றாக வேலை செய்கிறது" என்பதை பார்க்கின்றனர். பெங்களூரு இதற்கு சிறந்த இடமாக மாறியுள்ளது. இங்கு வாழ்க்கைத் தரம், வேலை வாய்ப்பு, முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவை சிறப்பாக உள்ளன. இதற்கு ஏற்றார் போல் சம்பளமும் கிடைக்கும் காரணத்தால் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் மக்களுக்கு பெங்களூர் முக்கிய விருப்பமாக உள்ளது.
இந்த திருப்பம் இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை காட்டுகிறது. NRIகள் திரும்பி வருவது பெங்களூருவை மட்டும் அல்லாமல் நாட்டின் வர்த்தக சந்தை முதலீட்டு சந்தையை வலுப்படுத்துகிறது. இது வேலைவாய்ப்புகள், ரியல் எஸ்டேட், ஸ்டார்ட்அப் சூழல் ஆகியவற்றை மேம்படுத்தும்.


Click it and Unblock the Notifications