வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு அனுப்பிய பண மதிப்பு (Remittances) புதிய சாதனை படைத்துள்ளது. டிசம்பர் 2023 காலாண்டில், அதாவது வெறும் 3 மாதத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு $29 பில்லியன் மதிப்பிலான பணத்தை அனுப்பியுள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், 29 பில்லியன் டாலர் என்ற அளவீடு, வரலாற்று உச்சமாகும். 1991ம் ஆண்டு முதல் Remittances அதிகரிக்க துவங்கியது, உலகமயமாக்கல் மற்றும் பொருளாதார சீர்திருத்தத்தின் மூலம் அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை அந்நாட்டின் வாழும் இந்தியர்கள் வாயிலாக பெறப்பட்டது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு பணம் அனுப்புவதற்கு முக்கிய காரணமாக, FCNR (வெளிநாட்டு நாணயம் - வெளிநாட்டு குடியிருப்போர்) கணக்குகளின் மீதான முதலீட்டுக்கு கிடைக்கும் அதிகப்படியான லாபம் தான்.
FCNR என்பது வெளிநாட்டு நாணயத்தில் டெபாசிட் பெற்று, வெளிநாட்டு நாணயத்திலேயே வட்டி வருமானம் அளிக்கப்படும், NRE கணக்கு என்பது வெளிநாட்டு நாணயத்தை ரூபாயாக மாற்றும் நடைமுறையை கொண்டு உள்ளது. வெளிநாட்டு வங்கி கணக்கில் கிடைக்கும் லாபத்தை காட்டிலும் FCNR கணக்கு முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் FCNR பண பரிவர்த்தனை (Remittances) என்பது, NRI கணக்குகளைப் போல் நாட்டை விட்டு வெளியேற்றக்கூடிய பணம் அல்ல, இது நிரந்தர பண பரிவர்த்தனை ஆகும். இதன் மூலம், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (CAD) குறைக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யின் சதவீதமாகக் கணக்கிடப்படும் நடப்பு கணக்கு பற்றாக்குறை சமீப காலங்களில் தொடர்ந்து குறைந்து வருகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம், வெவ்வேறு நாடுகளில் இடம் பெயர்ந்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை மற்றும் அந்தந்த நாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு சூழ்நிலையைப் பொறுத்தே அமையும்.
ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் கோவிட்-க்கு பிந்தைய பண பரிவர்த்தனை கணக்கெடுப்பின்படி, மொத்த பண பரிவர்த்தனையில் 23% அமெரிக்காவில் இருந்து வருகிறது. அதே சமயம், வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பண பரிவர்த்தனை குறைந்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்த பண பரிவர்த்தனை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றுகிறது.


Click it and Unblock the Notifications