தமிழ்நாட்டில் இருந்து ஒரு தலைமை தளபதி.. தமிழரை தேடி வந்த நாட்டின் உயரிய பதவி..!!

பாகிஸ்தான் , சீனா போன்ற நாடுகளால் அடிக்கடி எல்லை தாண்டிய பயங்கரவாதம் , எல்லை மோதல்கள் என பல பிரச்சினைகளை சந்திக்க கூடிய நாடு. அந்த வகையில் இந்தியா தன்னுடைய ராணுவம் , கடற்படை, விமானப்படை என மூன்றையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

நவீன ஆயுதங்கள் என மட்டுமில்லாமல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்பவும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டால் துரிதமாக முடிவெடுக்கும் திறனை கொண்டவர்களையும் தலைமை பொறுப்பில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. எனவே தான் நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், போர்க்காலங்களில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைப்பதற்காகவும் உடனடியாக முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தவும் முப்படை தலைமை தளபதி என்ற பதவியை உருவாக்கியது.

தமிழ்நாட்டில் இருந்து ஒரு தலைமை தளபதி.. தமிழரை தேடி வந்த நாட்டின் உயரிய பதவி..!!

2020ஆம் ஆண்டில் மோடி அரசு உருவாக்கிய இந்த முப்படை தலைமை தளபதி பதவியை முதலில் அலங்கரித்தவர் ஜெனரல் பிபின் ராவத். ஆனால் எதிர்பாரா விதமாக இவர் 2021ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அடுத்து 2ஆவது முப்படை தலைமை தளபதியாக 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அன்று ஜெனரல் அனில் சவுகான் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வருகிற 30ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. இதனை அடுத்து தமிழருக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது மத்திய அரசு.

Also Read

நாட்டின் 3ஆவது முப்படைகளின் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி என்பவரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் சுமார் 40 ஆண்டுகள் ராணுவ சேவையாற்றியவர். 1985ஆம் ஆண்டில் கார்வால் ரைபிள்ஸ் படையில் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் அவர் ராணுவத் துணை தளபதியாக பணியாற்றினார். உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள மத்திய ராணுவக் கட்டளை தளபதியாகவும் பணியாற்றினார்.

Recommended For You

தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் என்.எஸ். ராஜா சுப்பிரமணி வரும் 30ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். இங்கிலாந்து , இந்தியா என இரண்டு நாடுகளிலும் உள்ள ராணுவ அகாடெமியில் படிப்பை முடித்தவர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பயின்று முதுகலை பட்டத்தையும் பெற்றார் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புத்துறை சார்ந்த ஆய்வுகளில் எம்ஃபில் பட்டத்தையும் முடித்தவர்.

நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகள் குறித்த சிறப்பான புரிதலை கொண்டவர். முப்படைகளையும் நவீனப்படுத்துவது , ஒருங்கிணைப்பது , அசாதாரணமான சூழ்நிலைகளில் முப்படைகளையும் தலைமை ஏற்று வழி நடத்துவது என முக்கிய பொறுப்புகளை கொண்டவராக இவர் திகழ்கிறார். இவருக்கு மாதம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். 65 வயது ஆகும் வரை இவர் அந்த பதவியில் இருக்க முடியும். ராணுவத்தில் பல பதக்கங்களை வாங்கியவர் சீனா, பாகிஸ்தான் ராணுவ நகர்வுகள் குறித்த நிபுணத்துவம் பெற்றவர் என்பதால் அவருக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளது அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+