நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற உயர் பொறுப்பை வகித்து வருபவர் அஜித் தோவல். எல்லையில் எப்போதுமே பாகிஸ்தானும் சீனாவும் குடைச்சல் கொடுத்து வரும் நிலையில் இரண்டு நாடுகளையும் திறம்பட கையாள்வதில் வல்லவர். ஆனால் இவர் இண்டர்நெட், போன் பயன்படுத்துவதில்லை என கூறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் தாம் அஜித் தோவல் . பாகிஸ்தானில் இந்தியாவுக்காக சென்று உளவு பார்த்தவர். தற்போது நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். அஜித் தோவல் தான் மொபைல் போன் பயன்படுத்துவது கிடையாது இண்டர்நெட் கூட பயன்படுத்த மாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் விக்சித் பாரத் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அஜித் தோவல் அங்கு இருந்த இளைஞர்களோடு கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது நடந்த கேள்வி பதில் பிரிவில் ஒரு இளைஞர், நீங்கள் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவதில்லை என சொல்லப்படுகிறதே இது உண்மைதானா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அஜித் தோவல், ஆம் உண்மை தான் நான் இன்டர்நெட் பயன்படுத்துவது கிடையாது என தெரிவித்தார். நான் போன் கூட பயன்படுத்த மாட்டேன் என குறிப்பிட்டார். குடும்ப விஷயங்களுக்காக தேவைப்படுகிறது அல்லது மற்ற , மற்ற நாடுகளில் இருப்பவர்களோடு பேசியாக வேண்டும் என கட்டாயம் ஏற்பட்டால் மட்டும் தான் நான் போனை பயன்படுத்துவேன் என தெரிவித்திருக்கிறார். நான் எப்பொழுதுமே என்னுடைய வேலையில் போனையோ இன்டர்நெட்டையும் பயன்படுத்தவே மாட்டேன் இவை இரண்டும் இல்லாமலேயே என்னுடைய வேலையை நான் முடித்துக் கொள்வேன் என தெரிவித்திருக்கிறார்.
வேறு பல தகவல் தொடர்பு நடைமுறைகள் இருக்கின்றன அவை அனைத்தையும் நான் பயன்படுத்திக் கொள்வேன் என கூறியிருக்கிறார். போன், இண்டர்நெட்டில் டிராக்கிங் அபாயம் இருப்பதே அவற்றை தவிர்ப்பதற்கான காரணம் என்கிறார். அஜித் தோவலின் இந்த பதில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை அலங்கரிக்கும் ஐந்தாவது நபர் இவர்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் உளவுத்துறை , உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு என பல்வேறு சிறப்பு பிரிவுகளிலும் முக்கிய பதவிகளை வகித்தவர். 1945 ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்த இவர், 1968 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றவர். தன்னுடைய தைரியமான செயல்பாடுகளுக்காக கீர்த்தி சக்கரா விருதை பெற்ற இளம் காவல்துறை அதிகாரி என்ற பெருமை அஜித் தோவலுக்கு உண்டு.


Click it and Unblock the Notifications