NSE: கூடுதல் கண்காணிப்பில் இருந்து 2 அதானி நிறுவனங்கள் நீக்கம்..!

தேசிய பங்குச் சந்தை அமைப்பு அதானி போர்ட்ஸ் & SEZ மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களைக் கூடுதல் கண்காணிப்பு கட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ளது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய மூன்று அதானி குழுமம் நிறுவன பங்குகளை தேசிய பங்குச் சந்தை அமைப்பு அதிக ஏற்ற இறக்கத்தைத் தடுக்கக் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் (ஏஎஸ்எம்) கீழ் வைத்தது.

தற்போது இந்த 3 நிறுவனத்தில் 2 நிறுவனங்களை நீக்கியுள்ளது. இன்னும் அதானி எண்டர்பிரைசஸ் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் கீழ் உள்ளது.

கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை

கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை

பொதுவாக இத்தகைய குறுகிய காலக் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் இருக்கும் பங்குகளில் வர்த்தகம் செய்ய முதலீட்டாளர்கள் இன்ட்ராடே டிரேடிங்கிற்குக் கூட 100% முன்பணம் செலுத்த வேண்டும் எனப் பிரச்சனை உள்ளது.

முதலீட்டாளர் நலன்

முதலீட்டாளர் நலன்

கூடுதல் கண்காணிப்பு என்பது சந்தை ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கும், முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குமான செபி மற்றும் பங்குச்சந்தை அமைப்புகளின் முக்கிய முயற்சியாகும்.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை


இதன் படி பிப்ரவரி 3 ஆம் தேதி தேசிய பங்குச்சந்தை அமைப்பு அதானி குழும நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்த குறுகிய காலக் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் சேர்த்தது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை

தவறான நிர்வாகம் மற்றும் பங்கு விலைக் கையாளுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை வைத்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை மூலம் அதானி குழுமப் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவையும், தடுமாற்றத்தையும் எதிர்கொண்ட நிலையில் இந்தத் தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், முதலீட்டாளர் நலனுக்காகவும் 3 நிறுவனங்களைக் குறுகிய காலக் கண்காணிப்பில் வைத்தது.

அதானி குழும பங்குகள்

அதானி குழும பங்குகள்

ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஜனவரி 24 ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட நிலையில் ஜனவரி 25 முதல் அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகளின் பங்கு மதிப்பு பாதிக்கு மேல் குறைந்துள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு இந்த இடைப்பட்ட காலத்தில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டாளர்களின் செல்வத்தைக் குறைத்துள்ளது.

FPO திட்டம்

FPO திட்டம்

அதானி குழுமத்தின் பங்கு விலையில் ஏற்பட்ட கடுமையான சரிவு காரணமாகக் கௌதம் அதானி 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான் FPO திட்டத்திற்கு முழுமையான முதலீட்டை பெற்றும் ரத்து செய்தது. தற்போது இந்த FPO இருந்த ஆங்கர் முதலீட்டாளர்களான கிரேட் இன்டர்நேஷனல் டஸ்கர் ஃபண்ட் மற்றும் ஆயுஷ்மத் லிமிடெட் குறித்துச் செபி ஆய்வு செய்து வருகிறது.

மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ்

மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ்

அதானி குழுமத்திற்கு எதிராகச் செபி மட்டும் அல்லாமல் ஜனவரி 24 முதல் சிட்டிபேங்க், கிரெட்டி சுசி, MSCI எனப் பல முக்கியமான அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் முக்கியமாக உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ், அதானி க்ரீன் எனர்ஜி உட்பட அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களின் கண்ணோட்டத்தை "Stable" இருந்து "Negative" ஆகக் குறைத்தது.

கௌதம் அதானி மாஸ்டர் ஸ்ட்ரோக்

கௌதம் அதானி மாஸ்டர் ஸ்ட்ரோக்

இந்த நிலையில் கௌதம் அதானி அமெரிக்காவில் உள்ள மிக விலையுயர்ந்த சட்ட நிறுவனங்களில் ஒன்றான Wachtell, Lipton, Rosen & Katz-ஐ ஹிண்டன்பர்க் எதிராக வழக்கில் வாதிட நியமித்துள்ளார் எனப் பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வழக்கு

வழக்கு

அமெரிக்காவின் மிகப்பெரிய ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை மூலம் அதானி குழுமம் சுமார் 110 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பை இழந்த நிலையில். ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என எதிர்த்து வழக்குத் தொடுக்க உள்ளது. இதேவேளையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட 2வது அறிக்கையில் அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளுக்கும் தயார் என அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+