இந்தியாவைப் புரட்டிப்போட்ட NSE சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் மோசடி வழக்குகளில் தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்திய முதலீட்டாளர்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருக்கும் என்எஸ்ஈ-யில் பல்வேறு மோசடிகள் செய்தது மட்டும் அல்லாமல் சாமியார் அறிவுறுத்தல் பெயரில் தான் அனைத்தையும் செய்ததாகச் சித்ரா ராமகிருஷ்ணா கூறினார்.
இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்ரமணியன் அமலாக்கத் துறை பல நாட்களாக விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தேசிய பங்குச்சந்தை
தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் சிஇஓ மற்றும் நிர்வாகத் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் தொடர்புடைய பண மோசடி வழக்குகளில் முக்கியமான வழக்காகப் பார்க்கப்படும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா-வை ஜூலை 14 ஆம் தேதி பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்தது, இதைத் தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா-விடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.
என்எஸ்ஈ ஊழியர்கள்
இதில் முக்கியமாக என்எஸ்ஈ ஊழியர்களின் தொலைப்பேசியைச் சட்ட விரோதமாக ஒட்டுக்கேட்பு மற்றும் தனிநபர் தகவல்களை உற்று நோக்குதல் தொடர்பான வழக்கில் விசாரணைகள் தீவிரமாகப்பட்டது.
ஜாமீன் கோரிக்கை
இதைத் தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் கோரி மனு கொடுத்த நிலையில், அமலாக்கத் துறை ஜாமீன் வழக்க மறுப்புத் தெரிவித்தது மேலும் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சித்ரா தொடர்பில் உள்ளார், இதற்கான விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி சுனேனா ஷர்மா தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என மறுத்தார்.
பண மோசடி
2009 முதல் 2017 வரையில் நடந்த பல்வேறு பண மோசடிகள், என்எஸ்ஈ ஊழியர்களின் தொலைபேசியை சட்ட விரோதமாக ஒட்டுக்கேட்பு, பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவற்றில் முன்னாள் NSE CEO ரவி நரேன், சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் நிர்வாகத் துணைத் தலைவர் ரவி வாரணாசி மற்றும் தலைவர் மகேஷ் ஹல்திபூர் எனப் பலர் தொடர்புள்ளனர்.


Click it and Unblock the Notifications