டெல்லி: கடந்த 2019 - 20 நிதியாண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் சமூக சேவையில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சந்தை மூலம் நிதி திரட்டும் வகையில் சமூகப் பங்கு வரித்தனை திட்டம் குறித்து அறிவித்தார்.
இதன்படி லாப நோக்கற்ற சமூக சேவை நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலாக முடியும். இதற்கான சட்ட திட்டங்களை உருவாக்க பங்கு சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது.
இக்குழு சமூகப் பங்கு பரிவர்த்தனை தொடர்பான விதிகளை கடந்த ஆண்டு வெளியிட்டது.
தனிப் பிரிவு அறிமுகம்
தேசிய பங்கு சந்தையில் நிறுவனம் அதன் தளத்தில் சமூக பங்கு பரிவர்த்தனைக்கென்று, தனிப் பிரிவை அறிமுகம் செய்ய செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த தனிப் பிரிவில் தன்னார்வதொண்டு நிறுவனங்கள், லாப நோக்கற்ற நிறுவனங்கள், தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் அந்த நிறுவனங்கள் நிதி திரட்டுவது எளிமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செபி ஒப்புதல்
இது குறித்து தேசிய பங்கு சந்தை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ்குமார் சவுகான் கூறுகையில், சமூக பங்கு பரிவத்தனை பிரிவை அறிமுகப்படுத்த என் எஸ் இ-க்கு செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த சூழலில் சமூக சேவை நிறுவனங்களிடம் இது குறித்தான விழிப்புணர்வு குறித்தான பணியினை தொடங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.
இந்த அறக்கட்டளைகள் இடம்பெறாது?
செபியின் வரையறைக்கு உட்பட்ட சமூக வலைதள நிறுவனங்களே சமூகப் பங்கு பரிவர்த்தனை பிரிவில் பதிவு செய்து கொள்ள முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களின் அறக்கட்டளைகள், அரசியல் மற்றும் மத நிறுவனங்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஆகியவை இப்பிரிவில் இடம் பெற முடியாது.
நல்ல திட்டம் தான்
மொத்தத்தில் செபியின் இந்த அறிப்விப்பால் விரைவில் என் எஸ் இ-யில் சமூக சேவை வழங்கும் நிறுவனங்களும் இடம்பெறலாம். இதன் மூலம் தேவையான நிதியினை திரட்டிக் கொள்ளலாம் . இது சமூக வலைதள நிறுவனங்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம். அதேசமயம் முதலீட்டாளர்களுக்கும் குறைந்த ரிஸ்குள்ள முதலீடாக அமையலாம். எனினும் இது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது மட்டுமே தெரியவரும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications