பங்கு சந்தையா? அது ஒரு சூதாட்டம் என்ற நிலை மாறி, சமீபத்திய காலமாகத் தான் இளைஞர்களும் பங்கு சந்தை முதலீட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக பங்கு வெளியீட்டில் ஆர்வம் காட்டி வருவதாகவும் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியது.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாகவே பங்கு சந்தையினை ஊலுக்கி வரும் ஒரு சம்பவம், NSE குறித்தான முக்கிய ஆவணங்கள், இமயமலை சாமியாரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக கூறப்படுவது தான். இதுவே முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
யார் என்றே தெரியாத முகம் தெரியாத ஒரு சாமியாரிடம், இந்தியாவின் மிகப்பெரிய நிதி புழக்கமுள்ள ஒரு பங்கு சந்தை எக்ஸ்சேன்ஞ்சில் இப்படி நடந்துள்ளது பல தரப்பிலும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்பிரச்சனையை பற்றி விசாரிக்க விசாரிக்க ஏராளமான மோசடிகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
நம்பிக்கை தகர்வு
இது இந்திய பங்கு சந்தையின் மீதான நம்பிக்கையை அசைத்து பார்த்துள்ளது. குறிப்பாக என்எஸ்இ ரகசிய தகவல்களை முன் கூட்டியே பங்கு தரகு நிறுவனங்கள் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாக கூறப்படும் கோ லோகேஷன் ஊழல் வழக்கில், என்எஸ்இ-யின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் பல முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
முதல் பெண் CEO
1994ம் ஆண்டு தொடங்கப்பட்ட NSE, தொடங்கப்பட்ட 1 வருடத்திலேயே, 100 வருட பழமையான BSE எக்ஸ்சேன்ஞ்சினை முந்தியது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட வேகமாக வளர்ச்சி கண்டு வரும் ஒரு நிறுவனத்தில், முதன் பெண் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தான் சித்ரா ராமகிருஷ்ணன்.
ஃபேட் ஃபிங்கர் டிரேட்
அக்டோபர் 5, 2012 அன்று, காலையிலேயே NSEயில் ஃபேட் ஃபிங்கர் டிரேட்னால் (fat finger trade) பெரும் பாதிப்பினை கண்டது. இதன் காரணமாக ஒரு நொடிக்குள்ளேயே 650 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் நடந்து முடிந்தது. அந்த சமயத்தில் ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியினையும் சந்தை கண்டது. இதனால் முதலீட்டாளர்கள் நொடிகளில் கிட்டதட்ட 10 லட்சம் கோடிகளை இழந்தனர்.
முதலீட்டாளார்களுக்கு பெரும் இழப்பு
அந்த சமயத்தில் நிஃப்டி 16% சரிந்த பின்னர் தான் வர்த்தகத்தினை வலுகட்டாயமாக நிறுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இது முதலில் 10%, அதன் பிறகு 15% என்ற இரு தடைகளையும் தாண்டி 16% சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் வெறும் ஆறு வினாடிகளில் நடந்து முடிந்தது. NSEயின் இந்த மோசமான சம்பவமானது 15 நிமிடங்களுக்கு பிறகே முடிவுக்கு வந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பும் ஏற்பட்டது.
யோகியின் மெயில் மூலமே முக்கிய முடிவு
இதன் காரணமாக ஆரம்பத்தில் அப்போதைய தலைவர் ரவி நரேனுக்கு பெரும் பிரச்சனைகள் எழுந்தது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் என்.எஸ்.இயின் CEO-வாக சித்ரா ராமகிருஷ்ணன் பதவியேற்றார். இப்படி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பதவியேற்ற முதல் பெண் தலைமை அதிகாரியான சித்ரா, இமயமலை யோகியின் மெயிலை பார்த்த பின்னர் தான் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார் என்பது இன்னும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
களை எடுப்பதற்கான நேரம் இது?
இதற்கிடையில் என் எஸ் இ அதிகாரிகளை எடுப்பதற்கான நேரம் வந்து வந்துவிட்டது. இது பல ஆண்டுகளுக்கு முன்பே இப்பிரச்சனை தெரிந்திருந்தாலும், பல முறைகேடுகளும் மறைக்கப்பட்டுள்ளன. இதில் பல மூத்த அதிகாரிகளும் அடங்குவர், அரசு தரப்பிலும் சிலர் அடங்குவர் என குற்ற சாட்டுகள் எழுந்துள்ளன. அதோடு யோகி யார் என்று தெரிந்து கொள்வதோடு, கோ லோகேஷன், high-frequency trades உள்ளிட்டவற்றை பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள பிரச்சனைகள் களையப்பட வேண்டும். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.
தவறுகள் களையப்படணும்
பல வருடங்களாக இருந்து வந்த இந்த பிரச்சனை தற்போது தான் மக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆக ஒவ்வொரு தவறும் களையப்பட வேண்டும். மோசடியாளர்களின் முகத் திரை கிளித்தெரியப்பட வேண்டும்.
இதில் ஊழல், பணமோசடி, சட்ட விரோதமான வர்த்தகம் மற்றும் வணிக் போட்டிகள் என பலவும், குறிப்பாக அக்டோபர் 5, 2012 அன்று நடந்த "fat finger trade" என்ற பணமோசடி என பலவும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது.
ஃபேட் ஃபிங்கர் டிரேட்
ஃபேட் ஃபிங்கர் டிரேட் என்பது தவறாக ஆர்டர்களை போடுவது போன்ற (கணினியில் ஆர்டர் போடும்போது தவறான கீகளை அழுத்துவது) தரவுகளை சுட்டிக் காட்டுவது. ஆனால் அகடோபர் 5, 2012 அன்று நடைபெற்றது அப்படிப்பட்டது அல்ல. இந்த பிரச்சனை வேறு ஏதோ ஒரு ஆப்சனால் வந்தது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இது வேண்டுமென்றே இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இது குறித்து அந்த சமயத்தில் செபியால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மத்தியில், விசாரணையில் என் எஸ் இ-யின் அமைப்பு மற்றும் செயல்முறைகளை மேம்படுத்தும்படி கேட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
முரண்பாடு
இதனை தொடர்ந்து நடந்த ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுமே முரண்பாடாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை தனது ஆலோசகராக நியமித்தது. குறிப்பிட்ட காலத்திலேயே அவரது சம்பளத்தினை 4.21 கோடி ரூபாயாக உயர்த்தியது. ஆனந்த் சுப்ரமணியன் சித்ராவின் தோழியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் என்.எஸ்.இயிலும் ஊழியராக இருந்தார். எனினும் ஆலோசகராக நியமிக்க தலைமை நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் உண்டு என்ற நிலையில், நிர்வாகமும் இதற்கு அப்போது பெரிதாக எதிரொலிக்கவில்லை.
செபி கட்டுப்பாட்டு வளையத்தில் சித்ரா
இதன் பிறகு தான் சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்ந்து பல ஆண்டுகளாக பங்கு சந்தை பற்றிய ரகசிய தகவல்களை, இமயமலை யோகியிடம் பொருளாதார ஆலோசனை மற்றும் பங்கு சந்தை ரகசியங்களை பகிர்ந்து வந்ததாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் தான் செபியின் கட்டுப்பாட்டு வளையத்தில் தற்போது சித்ரா உள்பட பலரும் சிக்கியுள்ளனர்.
ஆன்மீக பற்று
இந்த சாமியரின் வழிகாட்டலின்படியே நிர்வாக தலைவரின் ஆலோசகராக ஆனந்த சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செபி கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளது. அதோடு சித்ரா ராமகிருஷ்ணாவை, ஆனந்த் சுப்ரமணியன் உளவியல் ரீதியாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்பட்டது. இவ்வளவு மோசடிகள் நடந்தும் ஏன் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற குற்றச்ச்சாட்டும் இருந்து வருகின்றது.
இமாலய மோசடிகள்
ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து கோ லொகேஷன் ஊழல் வழக்கை சிபிஐ தான் விசாரித்து வருகின்றது. ஆனால் தற்போது வரையில் இந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. ஆதாரங்கள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் செபி இந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். இது இ-வேஸ்ட் என்ற முறையில் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று செபி தரப்பு கூறுகின்றது. இப்படி இமாலய மோசடிகளுக்கு மத்தியில் இப்பிரச்சனையை இன்னும் தீர விசாரிக்கும்போது முழு உண்மையும் வெளிவரலாம். மொத்தத்தில் இதற்கும் இமயமலை யோகி என்ற ஆசாமிக்கும் என்ன சம்பந்தம் என்ற விவரங்கள் தெரியவரும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications