ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்பு அதானி குழும பங்குகள் அதிகளவிலான தடுமாற்றத்தையும் சரிவையும் சந்தித்த நிலையில் தேசிய பங்குச்சந்தை அமைப்பு அதானி குழுமத்தின் 3 நிறுவனங்களை தனது கூடுதல் கண்காணிப்பில் வைத்தது.
இந்த அறிவிப்பு அதானி குழும முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தாலும், இது முதலீட்டாளர்கள் நலனுக்காவே NSE இந்த நடவடிக்கையை எடுத்த காரணத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அதானி குழமத்தின் 4 நிறுவன பங்குகளுக்கு 15000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தொகையை முதலீடு செய்த நாளில் இருந்து தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்து வருகிறது.
இதனால் இன்று தேசிய பங்குச்சந்தை வெளியிட்ட அறிவிப்பில் அதானி எண்டர்பிரைசஸ் கூடுதல் கண்காணிப்பில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவித்துள்ளது, சுமார் ஒரு கண்காணிப்புக்கு பின்பு தற்போது ASM-ல் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது.
தேசிய பங்குச் சந்தை
பிப்ரவரி மாத தொடக்கத்தில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய மூன்று அதானி குழுமம் நிறுவன பங்குகளை தேசிய பங்குச் சந்தை அமைப்பு அதிக ஏற்ற இறக்கத்தைத் தடுக்கக் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் (ஏஎஸ்எம்) கீழ் வைத்தது. பிப்ரவரி 11 ஆம் தேதி தேசிய பங்குச் சந்தை அமைப்பு அதானி போர்ட்ஸ் & SEZ மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களைக் கூடுதல் கண்காணிப்பு கட்டமைப்பிலிருந்து நீக்கியது.
அதானி எண்டர்பிரைசஸ்
இன்று தேசிய பங்குச்சந்தை வெளியிட்ட அறிவிப்பில் அதானி எண்டர்பிரைசஸ் கூடுதல் கண்காணிப்பில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவித்துள்ளது, சுமார் ஒரு கண்காணிப்புக்கு பின்பு தற்போது ASM-ல் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது. புதன்கிழமை முதல் கண்காணிப்பில் இருந்து அதானி எண்டர்பிரைசஸ் நீக்கப்பட உள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்பு அதானி குழும பங்குகள் தொடர் சரிவின் காரணமாக பங்குச்சந்தையில் இருக்கும் 10 அதானி குழும பங்குகளும் அதிகளவிலான சரிவை சந்தித்தது. இதன் மூலம் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 50 சதவீதத்திற்கும அதிகமாக சரிந்தது.
GQG Partners முதலீடு
இந்த நிலையில் கடந்த வாரம் அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய 4 நிறுவனங்களில் 21 கோடி பங்குகளை அமெரிக்காவில் முதலீட்ட அலோசனை வழங்கும் GQG Partners Inc நிறுவனம் சுமார் 15,446 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
எஸ்.பி. அதானி குடும்ப அறக்கட்டளை
அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் எஸ்.பி. அதானி குடும்ப அறக்கட்டளை பிளாக் டீல் வாயிலாக அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய 4 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தது.
அதானி குழும பங்குகள்
மார்ச் 6 ஆம் தேதி வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ் - 5.51 சதவீதம் உயர்வு
5 நாளில் - 78.15 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 0.90 சதவீதம் உயர்வு
5 நாளில் - 24.55 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 4.99 சதவீதம் உயர்வு
5 நாளில் - 34.21 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 4.99 சதவீதம் உயர்வு
5 நாளில் - 21.53 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 5.00 சதவீதம் உயர்வு
5 நாளில் - 34.31 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 4.99 சதவீதம் உயர்வு
5 நாளில் - 20.69 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 5.00 சதவீதம் உயர்வு
5 நாளில் - 34.31 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 1.50 சதவீதம் சரிவு
5 நாளில் - 11.18 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 1.65 சதவீத சரிவு
5 நாளில் - 18.00 சதவீதம் உயர்வு
NDTV - 4.95 சதவீதம் உயர்வு
5 நாளில் - 32.45 சதவீதம் உயர்வு
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications