கரடியின் பிடியில் மாட்டிய ஸ்மால்கேப், மைக்ரோகேப் பங்குகள்.. தேவையில்லாத ரிஸ்க் எடுக்காதீங்க..!

இந்திய பங்குச் சந்தைகள் குறியீடுகள் 2024 செப்டம்பர் மாத இறுதி முதல் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் தள்ளாடுகின்றன. பங்குச் சந்தைகளில் லார்ஜ்கேப் முதல் மைக்ரோகேப் பங்குகள் வரை பாரபட்சம் இல்லாமல் கடுமையாக வீழ்ச்சி கண்டு வருகின்றன.

பொதுவாக ஒரு பங்கு அல்லது இன்டெக்ஸ் அதன் 52 வார உச்ச நிலையிலிருந்து 20 சதவீதம் சரிந்தால் அந்த பங்கு அல்லது இன்டெக்ஸ் வீழ்ச்சி மண்டலத்தில் இருப்பதாக கருதப்படும். என்எஸ்இ-ன் மைக்ரோ கேப் மற்றும் ஸ்மால்கேப் இன்டெக்ஸ்கள் அதன் 2024 உச்சத்திலிருந்து 20க்கும் மேலாக சரிவு கண்டன.

கரடியின் பிடியில் மாட்டிய ஸ்மால்கேப், மைக்ரோகேப் பங்குகள்.. தேவையில்லாத ரிஸ்க் எடுக்காதீங்க..!

கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் நிப்டி ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸ் மற்றும் மைக்ரோகேப் 20 இன்டெக்ஸ் முறையே 21.4 சதவீதம் மற்றும் 20.2 சதவீதம் சரிந்துள்ளன. இதனையடுத்து, என்எஸ்இ-ன் மைக்ரோ கேப் மற்றும் ஸ்மால்கேப் இன்டெக்ஸ்கள் கரடி சந்தையில் (சரிவில்) நுழைந்துள்ளன என்பது உறுதியாகி உள்ளது.

அதேசமயம், இதே காலத்தில் நிப்டி மிட்கேப் இன்டெக்ஸ் 17.7 சதவீதம் மட்டுமே சரிவடைந்துள்ளது. குவெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸின் தலைமை முதலீட்டு அதிகாரி அனிருத்தா சர்க்கார் கூறுகையில், இன்டெக்ஸ்களை காட்டிலும் பெரும்பாலான தனிப்பட்ட பங்குகள் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளன.

இன்டெக்ஸ்களின் வீழ்ச்சி தெளிவான படத்தை தரவில்லை என்று தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் ஸ்மால்கேப் மற்றும் மைக்ரோ கேப் இண்டெக்ஸ்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 10-30 சதவீதம் வரை குறைந்துள்ளன. ஸ்மால்கேப் இன்டெக்ஸ் மற்றும் மைக்ரோகேப் இன்டெக்ஸில் முறையே 79 மற்றும் 80 பங்குகள் 30-50 சதவீதம் சரிவடைந்துள்ளன.

2020 மார்ச் மாதத்துக்கு பிறகு பங்குச் சந்தைகள் இந்த அளவுக்கு மோசமான சரிவை சந்தித்துள்ளது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் இடைவிடா பங்கு விற்பனை நடவடிக்கையே இதற்கு காரணம். தற்போதைய சூழலில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஸ்மால்கேப் மற்றும் மைக்ரோகேப் பங்குகளில் முதலீடு செய்வது சரியானதாக இருக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+